Header Logo
Mogo Academy

செய்திகள்
ஆங்காங்கே மீட்கப்பட்ட சடலங்கள்

Jul 15, 2026 - 07:29 AM -

0

ஆங்காங்கே மீட்கப்பட்ட சடலங்கள்
Mobitel inner

கலேவெல மற்றும் தெரணியகல ஆகிய பகுதிகளில் இரண்டு சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நேற்று (14) மாலை கலேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வடமேற்கு கால்வாயின் ஹல்மில்லாகம பீலிபாலம பகுதிக்கு அருகில் பெண் ஒருவரின் சடலம் காணப்படுவதாக கலேவெல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


இவ்வாறு உயிரிழந்தவர் கலேவெல பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய பெண் ஆவார்.


இந்த பெண் மனநலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தவர் என்றும், கடந்த ஜூலை 13ஆம் திகதி இரவில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


சடலம் பிரேத பரிசோதனைக்காக தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இதேவேளை, தெரணியகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போபகந்த ஓயாவில் நபர் ஒருவரின் சடலம் காணப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தெரணியகல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


இவ்வாறு உயிரிழந்தவர் தெரணியகல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஆவார்.


சடலம் நீதவான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், பிரேத பரிசோதனைக்காக தெரணியகல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தெரணியகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


MOST READ

காணொளி
பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

Mobitel Upahara