Header Logo
Mogo Academy

செய்திகள்
ஜனாதிபதியிடம் ராஜினாமா கடிதத்தை கையளித்த மத்திய மாகாண ஆளுநர்!

Jul 15, 2026 - 09:18 AM -

0

ஜனாதிபதியிடம் ராஜினாமா கடிதத்தை கையளித்த மத்திய மாகாண ஆளுநர்!
Mobitel inner

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் தனது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பித்துள்ளார்.

 

சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட இந்த இராஜினாமா கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என்றும், இந்த இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பது குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை என்றும் பேராசிரியர் சரத் அபேகோன் 'அத தெரண' செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன், தான் பதவியிலிருந்து விலகுவதற்கு எடுத்த முடிவு முற்றிலும் தனிப்பட்ட காரணம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

பேராசிரியர் சரத் அபேகோன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் சில காலம் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதேவேளை, மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் பதவியும் தற்போது வெற்றிடமாக காணப்படுகின்றது. இப்பதவியில் இருந்த மஞ்சுளா மடஹபொல அண்மையில் ஓய்வு பெற்றமையே இதற்கு காரணமாகும்.

 

அந்தப் பதவியின் தற்காலிகப் பணிகளை மேற்கொள்வதற்காக மத்திய மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் இஷான் விஜேதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.


MOST READ

காணொளி
பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

Mobitel Upahara