Jul 15, 2026 - 12:21 PM -
0
உலகளாவிய சைபர் பாதுகாப்புத் துறையில் முன்னணி நிறுவனமான Sophos, உலகளாவிய ஓம்டியா சைபர்செக்யூரிட்டி எம்எஸ்பி சுற்றுச்சூழல் தலைமைத்துவ மேட்ரிக்ஸ் 2026 (Omdia Cybersecurity MSP Ecosystems Leadership Matrix 2026) தரவரிசையில் சம்பியனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய சைபர் பாதுகாப்புத் துறையின் தரநிலைகளை நிர்ணயிக்கும் முன்னணி ஆய்வு நிறுவனமான ஓம்டியா வழங்கியுள்ள இந்த அங்கீகாரம், Sophos நிறுவனத்தின் சிறந்த கூட்டாண்மை மாதிரிக்கும், அதன் அதிநவீன மேனேஜ் டிடெக்ஷன் அண்ட் ரெஸ்போன்ஸ் (MDR) சேவைக்கும் கிடைத்துள்ள பெரும் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
பொதுவாக, சேவை வழங்குநர்கள் ஒரு பாதுகாப்பு நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது அவர்களின் வணிக எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நீண்ட கால முடிவாகும். Sophos MDR சேவையானது உலகளவில் 40,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களையும், MSP-க்கள் மூலம் கூடுதலாக 2,35,000 வாடிக்கையாளர்களையும் பாதுகாத்து வருகிறது. இதன் மூலம், நிறுவனங்களின் பாதுகாப்புத் தேவைகள் எந்த நிலையில் இருந்தாலும், அவர்களுக்குத் தடையற்ற 24/7 முழுநேரப் பாதுகாப்பை வழங்க Sophos உதவுகிறது.
MSP நிறுவனங்களின் செயல்பாட்டுத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டே Sophos MDR சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய கூட்டாளர்களுக்கு உடனடி வணிகத் தள்ளுபடிகள், சிறந்த செயல்திறன் கொண்டவர்களுக்கு டைட்டானியம் டயர் (Titanium Tier) மூலம் கூடுதல் சலுகைகள் மற்றும் வணிக ஒப்பந்தங்களை வெற்றிகரமாக முடிக்க உதவும் இலவசச் சான்றிதழ்கள் ஆகியவை இதில் அடங்கும். மேலும், இதன் MSP Elevate Program & MSP Flex போன்ற வசதிகள் மூலம், செயல்பாட்டுச் சிக்கல்கள் ஏதுமின்றி வணிக வருவாயைப் பெருக்க வழிவகை செய்கிறது.
இது குறித்து Sophos நிறுவனத்தின் உலகளாவிய சேனல்கள், கூட்டணிகள் மற்றும் கார்ப்பரேட் மேம்பாட்டுப் பிரிவின் சிரேஷ்ட துணைத் தலைவர் கிறிஸ் பெல் கூறுகையில், “தற்போது அனைத்து MSP நிறுவனங்களும் கூடுதல் பொறுப்புகளுடன் செயல்பட வேண்டியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு 24/7 பாதுகாப்பு தேவைப்படுகிறது. காப்புறுதி நிறுவனங்களுக்கு ஆவணப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்றன. மேலும் நிறுவனங்களின் வாரியக் குழுக்கள் அபாயங்களை வணிகக் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள விரும்புகின்றன. இந்த மூன்றிற்கும் தீர்வை வழங்கும் ஒரு நிறுவனமே சந்தையில் வெற்றிபெற முடியும். ஓம்டியா அமைப்பின் இந்த சம்பியன் அங்கீகாரம், Sophos தனது கூட்டாளர்களைப் போட்டியில் வெல்ல வைக்கும் ஒரு சிறந்த நிறுவனம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
Sophos நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளான, நவீன பணிச்சூழலில் பாதுகாப்பு அளிக்கும் Workspace Protection மற்றும் Sophos Protected Browser ஆகியவற்றையும் ஓம்டியா பாராட்டியுள்ளது. மேலும், 2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், Sophos CISO Advantage என்ற புதிய பாதுகாப்பு தீர்வை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இச்சேவையானது ஒருங்கிணைந்த தொழில்நுட்பம், Agentic AI, அச்சுறுத்தல் நுண்ணறிவு மற்றும் மனித நிபுணத்துவம் ஆகியவற்றை இணைத்து, MSP கூட்டாளர்களுக்கு மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பு ஆலோசனைகளையும் உத்திகளையும் வழங்க உதவும்.
ஓம்டியா சைபர்செக்யூரிட்டி எம்எஸ்பி சுற்றுச்சூழல் தலைமைத்துவ மேட்ரிக்ஸ் அமைப்பானது, கூட்டாண்மைத் திட்டங்களைச் செயல்படுத்துதல், மேனேஜ் சேவைகளின் திறன், தயாரிப்புகளின் போட்டித்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் வேகம் ஆகிய பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் 24 சைபர் பாதுகாப்பு நிறுவனங்களை மதிப்பீடு செய்தது. இதில் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் செக்யூர்வொர்க்ஸ் (Secureworks) நிறுவனத்தை Sophos கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, அதன் தளம் மேலும் வலுவடைந்துள்ளது. இதன் அடிப்படையில், ஓம்டியாவின் இரண்டு முக்கிய தலைமைத்துவ மேட்ரிக்ஸ் அறிக்கைகளிலும் இடம்பிடித்த ஒட்டுமொத்த மூன்று நிறுவனங்களில் Sophos உம் ஒன்றாகத் திகழ்கிறது.
