Header Logo
Mogo Academy

வணிகம்
மாகாண பாடசாலை விளையாட்டுக்களுக்கு தசாப்தத்திற்கு மேலாக ஆதரவு வழங்கும் சமபோஷ ‘தினன தருவோ’ திட்டம் மூலம் ஊட்டச்சத்து மற்றும் விளையாட்டின் ஊடாக இலங்கையின

Jul 15, 2026 - 02:45 PM -

0

மாகாண பாடசாலை விளையாட்டுக்களுக்கு தசாப்தத்திற்கு மேலாக ஆதரவு வழங்கும் சமபோஷ ‘தினன தருவோ’ திட்டம் மூலம் ஊட்டச்சத்து மற்றும் விளையாட்டின் ஊடாக இலங்கையின
Mobitel inner

இலங்கையின் முன்னணி ஊட்டச்சத்து மிக்க தானிய உணவு வர்த்தக நாமமான சமபோஷ, மாகாணப் பாடசாலை விளையாட்டுப் போட்டிகளின் பிரதான அனுசரணையாளராக தொடர்ந்து 10ஆவது ஆண்டாகவும் தனது ஆதரவை வழங்கி வருகிறது. இதன் மூலம் திறமை மிக்க இளம் விளையாட்டு வீர வீராங்கனைகளை வளர்த்துவிடும் தனது நீண்டகால அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதோடு, இலங்கையின் சிறுவர்கள் மத்தியில் ஆரோக்கியமானதும் சுறுசுறுப்பானதுமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் தனது பணியையும் தொடர்ந்து வருகிறது. 

மாகாணக் கல்வித் திணைக்களங்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2026 மாகாணப் பாடசாலை விளையாட்டுப் போட்டிகள், ஜுலை 21ஆம் திகதி முதல் மேற்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா, தெற்கு மற்றும் சபரகமுவ ஆகிய ஏழு மாகாணங்களில் நடைபெறவுள்ளன. 3,500-க்கும் மேற்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த 35,000-க்கும் அதிகமான மாணவ விளையாட்டு வீர வீராங்கனைகள், 70 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றி பெறும் பாடசாலைகள் மற்றும் விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு மாகாணக் கல்வித் திணைக்களங்களினால் வெற்றிக் கிண்ணங்கள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன. 

வடமத்திய மாகாண விளையாட்டுப் போட்டிகள் ஜுலை 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை அனுராதபுரம் பொது விளையாட்டு மைதானத்திலும், ஊவா மாகாண விளையாட்டுப் போட்டிகள் ஜுலை 31ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 04ஆம் திகதி வரை பதுள்ளை, வின்சட் டயஸ் விளையாட்டரங்கிலும், தென்மாகாண விளையாட்டுப் போட்டிகள் ஓகஸ்ட் 04ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 07ஆம் திகதி வரை காலி தடல்ல விளையாட்டரங்கிலும், வடமேல் மாகாண விளையாட்டுப் போட்டிகள் செப்டெம்பர் 08ஆம் திகதி முதல் 11ஆம் திகதிவரை வென்னப்புவ, அல்பேர்ட் பேதிரிஸ் விளையாட்டரங்கிலும், மேல் மாகாண விளையாட்டுப் போட்டிகள் செப்டெம்பர் 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை தியகம, மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கிலும், கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டிகள் செப்டெம்பர் 09ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கிலும், சப்ரகமுவ மாகாண விளையாட்டுப் போட்டிகள் செப்டெம்பர் 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை எம்பிலிப்பிட்டிய மகாவலி பொது விளையாட்டு மைதானத்திலும் இடம்பெறவுள்ளன. 

மாகாணப் பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் சமபோஷவின் 'தினன தருவோ'; நீண்டகால சிறுவர் மேம்பாட்டு முன்முயற்சியின் முக்கிய அங்கமாகும். இத்திட்டமானது ஊட்டச்சத்து, விளையாட்டு, கல்வி, படைப்பாற்றல், தலைமைத்துவம் மற்றும் நற்பண்புகள் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் புதிய தலைமுறையினரை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்றது. வெற்றி பெறும் ஒவ்வொரு சிறுவரினதும் பயணமும் போதுமான ஊட்டச்சத்து, ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மற்றும் தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளிலிருந்தே ஆரம்பமாகிறது என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே இந்த 'தினன தருவோ' திட்டம். தன்னம்பிக்கை மிக்க, ஒழுக்கமுள்ள, பல்துறைத் திறன்கள் கொண்ட முழுமையான ஆளுமைகளாக சிறுவர்களை உருவாக்கி, நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும் பிரஜைகளா அவர்களை வலுப்படுத்த வேண்டும் என்ற சமபோஷவின் உறுதிப்பாட்டை இத்திட்டம் பிரதிபலிக்கின்றது. 

இத்திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த CBL உணவுக் கொத்தணியின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஞ்சுள தஹநாயக்க, “இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள் என்பதே எமது CBL நிறுவனத்தின் நம்பிக்கையாகும். சமபோஷவின் 'தினன தருவோ” தளத்தின் ஊடாக, போதுமான ஊட்டச்சத்துடன் மட்டுமன்றி சுறுசுறுப்பான, தன்னம்பிக்கை மிக்க மற்றும் எதிர்காலத்திற்குத் தேவையான தலைமைத்துவ பண்புகளைக் கொண்ட ஒரு தலைமுறை சிறுவர்களை உருவாக்குவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறோம். ஒழுக்கம், குழுப்பணி, சவால்களை எதிர்கொள்ளும் திறன், தன்னம்பிக்கை மற்றும் நற்பண்புகளை வளர்ப்பதில் விளையாட்டு முக்கிய பங்காற்றுகிறது. இளமையான இலங்கையர்களுக்கு விளையாட்டு மைதானத்திலும் அதற்கு வெளியிலும் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அவர்களை வலுப்படுத்துவது என்ற எமது நீண்டகால அர்ப்பணிப்பை இந்த மாகாணப் பாடசாலை விளையாட்டுப் போட்டிகளுடனான எமது தொடர்ச்சியான கூட்டாண்மை பிரதிபலிக்கின்றது. 

இந்த அர்ப்பணிப்பானது, CBL ழுமத்தின் பின்நோக்கிய ஒருங்கிணைப்பு திட்டமான ‘விவசாயக் குடும்பம்’ (கொவி பவுல) ஊடாக மேலும் வலுப்படுத்தப்படுவதுடன், இதன் ஊடாக உள்நாட்டில் பயிரிடப்படும் தானியங்களைப் பெற்றுக்கொள்வதற்காக 28,000-க்கும் மேற்பட்ட இலங்கை விவசாயக் குடும்பங்களுடன் கூட்டாண்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் விவசாயத்தை ஊக்குவிப்பதுடன், ஊட்டச்சத்து மிக்க தயாரிப்புகளை வழங்குவதன் மூலம், விவசாய சமூகங்களுக்கும் எதிர்கால தலைமுறையினருக்கும் நிலையான பெறுமதியை உருவாக்குவதில் நாம் பங்களித்து வருகிறோம்” என்றார். 

விளையாட்டுத் துறையின் அடிமட்டத்தில்; தொடர்ச்சியான முதலீடுகளை மேற்கொள்வதன் மூலமும், மாகாணக் கல்வித் திணைக்களங்களுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்படுவதன் மூலமும், சமபோஷ ஆயிரக்கணக்கான இளம் விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்குத் தமது திறமைகளை அடையாளம் காணவும், உயர்ந்த மாகாண மட்டத்தில் போட்டியிடவும், விளையாட்டின் மூலம் உருவாகும் ஒழுக்கம், சவால்களை எதிர்கொள்ளும் திறன், குழுப்பணி மற்றும் தன்னம்பிக்கை ஆகிய பண்புகளை வளர்த்துக்கொள்ளவும் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. 

கல்வி அமைச்சின் உடற் கல்வி மற்றும் விளையாட்டுப் பிரிவுக்கான பணிப்பாளர் ஆர்.எம்.கிரிஷான் துமிந்த கருத்துத் தெரிவிக்கையில், “பாடசாலை மாணவர்களின் திறன்களை மேம்படுத்துதல், அவர்களின் உடல் மற்றும் மன நலனை ஊக்குவித்தல், அத்துடன் அவர்களின் திறமைகளை தேசிய மட்டத்திற்கு உயர்த்துவதற்குத் தேவையான அடித்தளத்தை வழங்குதல் ஆகிய பணிகளில் கடந்த பத்து ஆண்டுகளாக CBL சமபோஷ வழங்கி வரும் மகத்தான ஆதரவுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார். 

CBL குழுமம் பற்றி 

1968ஆம் ஆண்டு நிறுவப்பட்ட CBL குழுமம், இலங்கையின் மிகப்பெரியதும் பல்துறை உணவு உற்பத்தி நிறுவனக் குழுமங்களில் ஒன்றாகும். பிஸ்கட், இனிப்புப் பண்டங்கள், தானிய உணவுகள், தெங் சார்ந்த தயாரிப்புகள் மற்றும் உடனடி உணவு வகைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்நிறுவனம் வலுவான பிரசன்னத்தைக் கொண்டுள்ளது. இலங்கை, கானா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் CBL குழுமத்தின் தயாரிப்புகள் உலகளாவிய ரீதியில் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள நுகர்வோரை சென்றடைகின்றன. உலக சந்தைகளில் முன்னணி வகிக்கும் CBL நிறுவனத்தின் வர்த்தக நாமங்கள், மில்லியன் கணக்கான நுகர்வோரின் நம்பிக்கையைப் பெற்றுள்ளன. தனது நம்பிக்கைக்குரிய வர்த்தக நாமங்கள் மற்றும் உயர்தரமான உணவுப் பொருட்களின் ஊடாக மகிழ்ச்சியான அனுபவங்களை உருவாக்கி வரும் CBL குழுமம், தொடர்ந்தும் புத்தாக்கம், நிலையான வளர்ச்சி மற்றும் சர்வதேச விரிவாக்கத்தை முன்னெடுத்து வருகிறது.


MOST READ

காணொளி
கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

Mobitel Upahara