Header Logo
Mogo Academy

வணிகம்
இரத்மலானையில் 'Rainbow Apartments' வீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய NovaNest Properties

Jul 16, 2026 - 11:31 AM -

0

 இரத்மலானையில் 'Rainbow Apartments' வீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய NovaNest Properties
Mobitel inner

NovaNest Properties (Pvt) Ltd நிறுவனம், இலங்கையின் வளர்ந்து வரும் அடுக்குமாடி குடியிருப்புச் சந்தையில் தனது புதிய வரவாக, இரத்மலானையில் ‘Rainbow Apartments’ எனும் புதிய குடியிருப்புத் திட்டத்தை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. கொழும்பு, ஷங்ரி-லா ஹோட்டலில் நடைபெற்ற உத்தியோகபூர்வ விழாவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

இந்த வீட்டுத் திட்டமானது நவீன நகர்ப்புற வாழ்க்கையை விரும்பும் வீட்டு உரிமையாளர்களையும், நீண்டகால மதிப்பை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களையும் இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. குடியிருப்புத் தேவைகள் தொடர்பில் அதிகரித்து வரும் இரத்மலானை பகுதியில் அமைந்துள்ள இந்த 'Rainbow Apartments' ஆனது, அப்பகுதியில் சிறப்பாக கட்டமைக்கப்பட்ட சமூக உட்கட்டமைப்பு, ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட போக்குவரத்து இணைப்புகளுக்கான அண்மித்த தன்மை மற்றும் கொழும்பு நகருக்கான இலகுவான அணுகல் போன்ற பல நன்மைகளைக் கொண்டுள்ளது. 

இத்திட்டமானது சமகால வடிவமைப்பையும் நடைமுறை வாழ்க்கையையும் ஒருங்கிணைத்து, தரமான குடியிருப்புத் திட்டங்களை வழங்குவதில் NovaNest Properties கொண்டுள்ள அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. இன்றைய வீட்டு உரிமையாளர்களின் மாறிவரும் வாழ்க்கை முறைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்ட இல்லங்களை Rainbow Apartments கொண்டுள்ளது. 

இதில் இரண்டு முடிவிலி (infinity) நீச்சல் தடாகங்கள், ஒரு உடற்பயிற்சி கூடம், முழுமையான செயற்பாட்டு பணியிடங்கள், ஒரு மினி தியேட்டர், நவீன உணவகங்கள், ஒரு மினி-மார்ட், சிறுவர் பராமரிப்பு நிலையம் ஆகியன உள்ளடங்குகின்றன. அத்துடன், கொழும்பு நவலோக மருத்துவமனையின் ஆதரவுடன் 24 மணி நேர அம்பியுலன்ஸ் சேவையுடன் முழு நேர மருத்துவ மையமும் காணப்படுகின்றது. 

வசதி, பாதுகாப்பு, இலகுவாக அடையும் தன்மையைக் கொண்டிருத்தலுடன், மூலதன வளர்ச்சியையும் வழங்கக்கூடிய வீடுகளை கொள்வனவு செய்வோர் அதிகரித்து வரும் நிலையில், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான அதிகரித்து வரும் தேவையும் இந்த அறிமுகத்தின் மூலம் எடுத்துக் காட்டப்படுகிறது. இந்த அறிமுகம் குறித்து NovaNest Properties நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சமித்த வைத்யசேகர கருத்துத் தெரிவிக்கையில், "இன்றைய கொள்வனவாளர்கள் வெறுமனே இடத்தை கொள்வனவு செய்வதற்கு அப்பால் சிந்திக்கிறார்கள். நீண்ட கால மதிப்பை வழங்குகின்ற, தாம் பணிபுரிகின்ற, கல்வியைப் பெறுகின்ற, நேரத்தைச் செலவிடுகின்ற இடங்களுக்கு அருகாமையில் இருக்கும் வீடுகளையே அவர்கள் விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தைக் கருத்தில் கொண்டே, கொள்வனவாளர்களின் தேவைகளை எதிர்வரும் பல ஆண்டுகளுக்கு பூர்த்தி செய்யும் வகையில், மூலோபாய ரீதியிலான அமைவிடம், சிந்தனை ரீதியான வடிவமைப்பு, தரமான கட்டுமானம் ஆகியவற்றை ஒன்றிணைத்து Rainbow Apartments உருவாக்கப்பட்டுள்ளது. 

'எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட ஆடம்பரம்' (Luxury beyond Expectations) எனும் எமது வாக்குறுதியின் மூலம், மன நிறைவு, வசதி, நவீன வாழ்க்கை ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு உயர்தர வாழ்க்கை முறை அனுபவத்தை வழங்க நாம் கடமைப்பட்டுள்ளோம். Rainbow அடுக்குமாடி குடியிருப்புகள் மூலம், இரத்மலானையில் புதிய தரமான குடியிருப்புகளை அறிமுகப்படுத்துவதோடு, மக்கள் தினமும் தங்கள் இல்லத்திற்கு வருவதை மனதார விரும்பும் ஒரு சமூகத்தையும் நாம் உருவாக்குகிறோம்." என்றார். 

இது குறித்து, NovaNest Properties நிறுவனத்தின் வர்த்தகநாமம் மற்றும் தகவல் தொடர்பாடல் தலைவர் திலின மாகல்ல தெரிவிக்கையில், “இன்றைய காலத்தில் ஒரு குடியிருப்புத் திட்டத்தின் அறிமுகம் என்பது கட்டுமானத்தைப் போன்றே அதிலுள்ள தெளிவான வெளிப்படும் தன்மையிலும் தங்கியுள்ளது. Rainbow Apartments திட்டத்தில் உள்ள வீடுகள், சாத்தியமான கொள்வனவாளர்களுக்கு எவ்வாறான அனுபவத்தை ஏற்படுத்தும் என்பதில் எமது கவனம் அமைந்தது. இத்திட்டத்தை வெளிப்படுத்தப் போகும் விதம் முதல், இருப்பிடம், வசதி, நீண்ட கால பெறுமதி ஆகியவற்றின் மீதான அவர்களது எதிர்பார்ப்புகளுடன் இத்திட்டம் எவ்வாறு இணைகிறது போன்ற அனைத்து விடயங்களிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தொடர்பான தகவல்களின் பரிமாற்றங்களானது, வீடுகளை மக்கள் எவ்வாறு மதிப்பிடுகிறார்கள் என்பதில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது.” என்றார். 

தரமான கட்டுமானத்தையும் வாடிக்கையாளர் மைய வடிவமைப்பையும் ஒருங்கிணைத்து, அதன் மூலம் இலங்கையின் நகர துறையின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு பங்களிக்கும் குடியிருப்பு சமூகங்களை மேம்படுத்துவதற்கான தனது பரந்த தொலைநோக்குப் பார்வையின் ஒரு அங்கமாக இந்தத் திட்டம் அமைகிறது என, திலின மேலும் தெரிவித்தார். 

Rainbow Apartments பற்றி மேலும் அறிய மற்றும் அதன் சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்ட குடியிருப்புகள், நவீன வசதிகள், நெகிழ்வான உரிமை தெரிவுகளை ஆராய, NovaNest Properties (Pvt) Ltd ஐத் தொடர்பு கொள்ளவும். 

தொலைபேசி: 077 440 6555
இணையத்தளம்: www.nnpsl.com
 


MOST READ

காணொளி
பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

Mobitel Upahara