Jul 16, 2026 - 02:55 PM -
0
சமூக மேம்பாடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூக முன்னேற்றத்திற்கான தமது நீண்டகால அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், டேவிட் பீரிஸ் குழுமம் (David Pieris Group) 5 நாட்கள் ‘சமூக வலுவூட்டல் திட்டம் – மட்டக்களப்பு’ எனும் பரந்த சமூக நலன்புரி திட்டத்தை 2026 ஜூலை 15 - 19 வரை முன்னெடுக்கவுள்ளது.
மட்டக்களப்பு, திருகோணமலை வீதியில் உள்ள DPMC வளாகத்தில் டேவிட் பீரிஸ் குழுமத்தின் சமூக வலுவூட்டல் திட்டத்தை, டேவிட் பீரிஸ் குழும நிறுவனங்களின் நிறுவுனரும் அதன் தலைவருமான டேவிட் பீரிஸ், உத்தியோகபூர்வமாகத் ஆரம்பித்து வைத்தார்.
சமூக, கல்வி, தொழில்முனைவு, அபிவிருத்தி ஆகியன சார்ந்த பல்வேறு திட்டங்களின் மூலம் சமூகங்களுக்கு வலுவூட்டுவதை நோக்கமாகக் கொண்ட இந்த விரிவான திட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், டேவிட் பீரிஸ் குழுமத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ உறுப்பினர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
இந்த சமூக வலுவூட்டல் திட்டம் மற்றும் அதன் 5 நாள் வர்த்தகக் கண்காட்சியின் ஒரு முக்கிய சிறப்பம்சமாக, நிலைபேறான தன்மைக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பு அமைகின்றது. அதேவேளை, இக்கண்காட்சிக்கான மின்சாரம், David Pieris Solar நிறுவனத்தின் சூரிய மின்சக்தி தீர்வுகள் மூலம் வழங்கப்படுகிறது. இது, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் சூழலுக்குப் பொறுப்பான நடைமுறைகளுக்கான குழுமத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
இந்நிகழ்ச்சியானது மட்டக்களப்பு, திருகோணமலை வீதியில் அமைந்துள்ள டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (DPMC) நிறுவனத்திற்குச் சொந்தமான வளாகத்தை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளதுடன், மேலும் பல செயற்பாடுகள் நகரின் ஏனைய இடங்களிலும் இடம்பெறவுள்ளன.
ஒரு முழுமையான சமூக வலுவூட்டல் திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டம், தொழில்முனைவோருக்கு ஆதரவளித்தல், வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வை மேம்படுத்தல், தொழிற்பயிற்சி மற்றும் தொழில்நுட்ப திறன்களை ஊக்குவித்தல், பாடசாலை மற்றும் பல்கலைக்கழக உதவித் திட்டங்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களை வலுவூட்டுதல், சமூக ஈடுபாட்டை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பல்வேறு செயற்பாடுகளை கொண்டுள்ளது.
இந்த திட்டத்தின் முக்கியமான விடயங்களில் ஒன்றாக 5 நாட்கள் வர்த்தகக் கண்காட்சி (Trade Fair) இடம்பெறவுள்ளது. இது ஜூலை 15 - 19 வரை DPMC வளாகத்தில் பொதுமக்களுக்காக காட்சிப்படுத்தப்படவுள்ளது. இதில் கலந்துகொள்ளும் பார்வையாளர்கள் David Pieris Motor Company, Assetline Finance, David Pieris Automobiles, David Pieris e-Mobility, David Pieris Solar Energy, David Pieris Logistics, Assetline Insurance Brokers மற்றும் David Pieris Leisure உள்ளிட்ட டேவிட் பீரிஸ் குழுமத்திலுள்ள பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகள், சேவைகள், நேரடி விளக்கக்காட்சிகள், அனுபவங்கள் மற்றும் பிரத்தியேக ஊக்குவிப்புச் சலுகைகளை ஆராய்ந்து அறிவதற்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள்.
இதனுடன் இணைந்து, East Lagoon ஹோட்டலில் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் ஒன்றும் நடாத்தப்பட்டது. இங்கு, வளரும் தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிக உரிமையாளர்களுக்கு, அவர்களின் வணிகங்களை வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் மதிப்புமிக்க அறிவும் நடைமுறை வழிகாட்டுதலும் வழங்கப்பட்டது.
அத்துடன் DPMC வளாகத்தில் பெண்கள் மேம்பாட்டுத் திட்டமும் இடம்பெற்றது. இது, அழகுக்கலைத் துறையில் பெண்களுக்கு நடைமுறை அறிவையும் திறன்களையும் வழங்குவதன் மூலம் அவர்களை மேம்படுத்துவதோடு, பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்புகளையும் ஊக்குவிக்கும்.
ஜூலை 16 அன்று, திருகோணமலை வீதியில் உள்ள DPMC வளாகத்தின் முன்பாக வீதிப் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றும் நடத்தப்படும். இது பொறுப்பான சாலை நடத்தை மற்றும் பாதுகாப்பான பயணப் பழக்கவழக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஜூலை 18 ஆம் திகதி, 'பஜாஜ் தினம்' கொண்டாடப்படும். அன்றைய தினம் DPMC வளாகத்தில் இரண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கான போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியானது, பாதுகாப்பான பயணப் பழக்கவழக்கங்களையும் பொறுப்பான வீதிப் பயன்பாட்டையும் ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தும். மேலும், உள்ளூர் வாகனப் பழுதுபார்க்கும் மெக்கானிக்களுக்கான தொழில்நுட்பப் பயிற்சித் திட்டமானது, அவர்களின் தொழில்முறைத் திறன்களையும் சேவைத் தரங்களையும் மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப அறிவையும் நடைமுறை வழிகாட்டுதலையும் வழங்கும்.
நிகழ்ச்சியின் இறுதி நாளான ஜூலை 19 ஆம் திகதி, கல்லடி, புதிய கல்முனை வீதி, சிவானந்த தேசியப் பாடசாலை மைதானத்தில் விளையாட்டு மற்றும் சமூகப் பங்கேற்பை ஊக்குவிக்கும் நோக்கில் கிரிக்கெட் போட்டியும் மற்றும் வாழைச்சேனையில் கால்பந்துப் போட்டி நடைபெறும். அதே நேரத்தில், DPMC டீலர்களின் தொழில்நுட்பத் திறன்களை மேலும் வலுப்படுத்துவதற்காக, DPMC வளாகத்தில் அவர்களுக்கான இயந்திரவியல் பயிற்சித் திட்டம் நடத்தப்படும்.
இவை தவிர, இக்காலகட்டத்தில் பாடசாலை மேம்பாட்டுத் திட்டங்கள், தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள், வாகன தரநிலை மற்றும் புகைப்பரிசோதனை (Bajaj & KTM), பசுமைக் காலநிலை நடவடிக்கை திட்டம் மற்றும் பல்கலைக்கழக உள்ளகப் பயிற்சி வலுவூட்டல் திட்டம் ஆகியவையும் நடத்தப்படும்.
இந்த சமூக வலுவூட்டல் திட்டமானது, சமூகங்களில் முதலீடு செய்வதன் மூலம் வணிகச் செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையான மதிப்பை உருவாக்கும் டேவிட் பீரிஸ் குழுமத்தின் தொலைநோக்குப் பார்வையைப் பிரதிபலிக்கிறது. சிறந்த அர்த்தமுள்ள கூட்டாண்மைகள் மற்றும் முயற்சிகள் மூலம், DPMC குழுமம் இலங்கையின் நீண்டகால சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குத் தொடர்ந்து பங்களித்து வருகிறது, மேலும் நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்குவதில் முன்னணியில் உள்ளது. இந்த சமூக வலுவூட்டல் திட்டமானது எதிர்காலத்தில் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
