Header Logo
Mogo Academy

செய்திகள்
பல கோடி பெறுமதியான கொக்கேய்னுடன் வௌிநாட்டு பிரஜை கைது

Jul 18, 2026 - 12:02 PM -

0

பல கோடி பெறுமதியான கொக்கேய்னுடன் வௌிநாட்டு பிரஜை கைது
Mobitel inner

சுமார் 9 கோடியே 8 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய கொக்கேய்ன் போதைப்பொருள் தொகையுடன் வௌிநாட்டு பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

தனது பயணப்பொதியில் இந்த போதைப்பொருள் தொகையை மறைத்து வைத்து, விமான நிலையத்தின் "பசுமை வழி" (Green Channel) ஊடாக வெளியேற முயன்ற குறித்த பயணியை இன்று (18) காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர் 23 வயதான மலேசிய பிரஜை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த நபர் இந்த போதைப்பொருள் தொகையை மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து பெற்றுக்கொண்டு டுபாய்க்குச் சென்றுள்ளார். 

அங்கிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-650 என்ற விமானம் மூலம் இன்று காலை 09.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். 

இதன்போது, அவர் கொண்டு வந்த பயணப்பொதியில் 03 சொக்லேட் டொப்பி போத்தல்களில், 92 மாத்திரைகளாக மிகவும் நுணுக்கமான முறையில் பொதி செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 816 கிராம் எடையுடைய கொக்கேய்ன் போதைப்பொருள் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட பயணி மற்றும் அவரிடமிருந்து மீட்கப்பட்ட கொக்கேய்ன் போதைப்பொருள் தொகை என்பன மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara