Header Logo
Mogo Academy

செய்திகள்
பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் உயிரைப் பறித்த கோர விபத்து

Jul 18, 2026 - 03:47 PM -

0

பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் உயிரைப் பறித்த கோர விபத்து
Mobitel inner

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் வவுனியா, நவகம பகுதியில் இன்று (18) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட்   ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடமைகளை முடித்துவிட்டு வவுனியா, இரட்டப்பெரியகுளம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட், டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

வவுனியா தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 46 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட்டே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட்டின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலை சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து குறித்து வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara