Header Logo
Mogo Academy

செய்திகள்
பொத்துவில் கடலில் தத்தளித்த மீனவர் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்பு

Jul 18, 2026 - 05:37 PM -

0

பொத்துவில் கடலில் தத்தளித்த மீனவர் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்பு
Mobitel inner

பொத்துவில் கடற்பரப்பில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஆபத்தில் சிக்கிய இலங்கை மீனவப் படகு ஒன்றில் இருந்த மீனவர் ஒருவரை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். 

கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்புப் பணி ஒருங்கிணைப்பு மையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, கடற்படைக்குச் சொந்தமான 'விஜயபாகு' கப்பல் மற்றும் ஏனைய விசேட படகுகளைப் பயன்படுத்தி நேற்று (17) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, பொத்துவில் கடற்பரப்பிற்கு அப்பால் ஆபத்தில் சிக்கியிருந்த படகில் இருந்த மீனவர் கண்டுபிடிக்கப்பட்டார். 

பாதுகாப்பாக மீட்கப்பட்ட அந்த மீனவருக்கு 'விஜயபாகு' கப்பலில் முதலுதவி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அவசரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ​வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara