Header Logo
Mogo Academy

செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: மேலும் 6 என்புக்கூடுகள் மீட்பு

Jul 18, 2026 - 06:48 PM -

0

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: மேலும் 6 என்புக்கூடுகள் மீட்பு
Mobitel inner

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று (18) நடைபெற்றன.

செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 36ஆவது நாளான இன்றைய தினம் (18) புதிதாக ஒரு பெரியவரின் என்புக்கூட்டுடன் சிறியவர் ஒருவரின் என்புக்கூடும் உள்ளடங்கலாக 6 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவற்றுள் 5 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

வெள்ளை நிறத்திலான பாசிமணி, இரும்புத்துண்டு, வளையல் என்பவை பிற சான்றுப் பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன. 

அத்துடன் மூன்று மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஒரு மண்டையோடு வித்தியாசமான முறையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனைச் சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில், செம்மணிப் புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் என இதுவரையில் 90 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இதுவரை 437 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றுள் 428 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

--

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara