Header Logo
Mogo Academy

செய்திகள்
காலநிலை மாற்றம்: கிராமங்களுக்கும் விழிப்புணர்வு தேவை - சஜித்

Jul 18, 2026 - 08:22 PM -

0

காலநிலை மாற்றம்: கிராமங்களுக்கும் விழிப்புணர்வு தேவை - சஜித்
Mobitel inner

காலநிலை மற்றும் வானிலை மாற்றங்கள், சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல்களைத் தலைநகரத்திற்கு அப்பால் விரிவுபடுத்தி, கிராமிய மட்டத்தில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

 

காலநிலை மாற்றம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எல் நினோ - லா நினா (El Nino - La Nina) காலநிலை குறித்து சர்வதேச நிபுணர் குழுவினருடனான விசேட அமர்வு இன்று (18) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

 

 இதில் பங்கேற்று உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

காலநிலை மாற்றம் பற்றிய கலந்துரையாடல்களைத் தலைநகரத்தை மையமாகக் கொண்ட பாராளுமன்ற விவாதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது, கிராமப்புற மற்றும் ஏனைய நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். கிராமங்கள்தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அடிமட்ட அளவிலான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

இந்தக் கலந்துரையாடல்களையும் விழிப்புணர்வுச் செயற்பாடுகளையும் தலைநகரத்திற்கு வெளியே கிராமங்களுக்குக் கொண்டுசெல்வதன் மூலம், சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான கொள்கை வகுப்பில் சாதாரண பொதுமக்களும் பங்கெடுக்கும் வாய்ப்புக் கிடைக்கும். இது பங்கேற்பு ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்துவதாக அமையும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

 

மேலும், எல் நினோ - லா நினா நிலைமையால் கடுமையான குழப்பநிலை உருவாகிக் காணப்படுகின்றது. இதனால் நமது நாடு, சுற்றாடல் கட்டமைப்பு, பல்லுயிர்ப் பெருக்கம், தாவரங்கள் மட்டுமன்றி விலங்கினங்கள் மற்றும் மனித வளங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பது குறித்த பல விடயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது. 

 

அத்துடன், யானை - மனித மோதலைக் குறைத்தல் மற்றும் சிறுத்தைகளைப் பாதுகாத்தல் குறித்து நிபுணத்துவக் கலந்துரையாடல்கள் மற்றும் அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட்டதையிட்டுத் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

 

இந்த அமர்வில் காலநிலை மாற்றம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவரான பேராசிரியர் எல்.எம். அபேவிக்ரம மற்றும் இத்துறை சார்ந்த நிபுணத்துவம் வாய்ந்த பேராசிரியரான அஹிம்சா காம்போஸ்-அர்சிஸ் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara