Header Logo
Mogo Academy

செய்திகள்
டெங்கு அபாயத்தில் பாடசாலைகள்! அதிரவைக்கும் தரவுகள்!

Jul 18, 2026 - 10:25 PM -

0

டெங்கு அபாயத்தில் பாடசாலைகள்! அதிரவைக்கும் தரவுகள்!
Mobitel inner

வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு சோதனைகளின் போது, டெங்கு நுளம்புக் குடம்பிகள்  பெருகும் இடங்கள் அதிகளவில் பாடசாலைகளிலேயே கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

 

இவ்வருடத்தின் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் 250,477 வளாகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவற்றில் பாடசாலை வளாகங்களிலேயே அதிகளவிலான டெங்கு நுளம்புக் குடம்பிகள் கண்டறியப்பட்டுள்ளன.

 

அதன்படி, சோதனை செய்யப்பட்ட பாடசாலை வளாகங்களில் 42.5% இல் டெங்கு நுளம்புக் குடம்பிகள் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், சோதனை செய்யப்பட்ட தொழிற்சாலைகளில் 38.4% இலும், அரச நிறுவன வளாகங்களில் 28.1% இலும், மத வழிபாட்டுத் தலங்களில் 25.9% இலும் மற்றும் வீடுகளில் 9.2% இலும் நுளம்புக் குடம்பிகள் கண்டறியப்பட்டுள்ளன.

 

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தரவுகளின்படி, நேற்று (17) வரையில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 74,478 ஆகும்.

 

அவற்றுள், ஜூலை மாதத்தின் கடந்த 17 நாட்களில் மாத்திரம் 19,100 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

 

தொடர்ந்தும் மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதுடன், கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் 15,596 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

 

இதேவேளை, டெங்கு பரவலின் தீவிரத்தன்மையைக் காட்டும் வகையில், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் மேலும் 3 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக இலங்கையில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara