Header Logo
Mogo Academy

செய்திகள்
2026 உலகக் கிண்ண கால்பந்து: பிரான்ஸை வீழ்த்தி 3-வது இடத்தை பிடித்தது இங்கிலாந்து!

Jul 19, 2026 - 06:21 AM -

0

2026 உலகக் கிண்ண கால்பந்து: பிரான்ஸை வீழ்த்தி 3-வது இடத்தை பிடித்தது இங்கிலாந்து!
Mobitel inner

விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத 2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில், பிரான்ஸ் அணியை 6-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது. 

 

இங்கிலாந்து அணியின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு புகாயோ சாகா அடித்த ​ஹெட்ரிக் கோல்கள் முக்கிய காரணமாக அமைந்தது.

 

மியாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே இங்கிலாந்தின் டெக்லான் ரைஸ் முதல் கோலை அடித்து கணக்கைத் தொடங்கினார். 

 

தொடர்ந்து அதிரடி காட்டிய இங்கிலாந்து அணிக்கு 18-வது நிமிடத்தில் எஸ்ரி கோன்சாவும், 37 மற்றும் 45+1 நிமிடங்களில் புகாயோ சாகாவும் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர். 

 

இதனால் முதல் பாதியில் இங்கிலாந்து அணி வலுவான முன்னிலை பெற்றது.

 

இரண்டாவது பாதியில் பிரான்ஸ் அணி ஆக்ரோஷமாக பதிலடி கொடுக்கத் தொடங்கியது. பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே 48 மற்றும் 66 ஆகிய நிமிடங்களில் இரண்டு கோல்களையும், 54-வது நிமிடத்தில் பிராட்லி பார்கோலாவும் கோல் அடித்து இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.

 

இருப்பினும், ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய புகாயோ சாகா, தனது 3-வது கோலை பதிவு செய்து ஹெட்ரிக் சாதனையுடன் இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார். 

 

ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (90+6') பிரான்ஸின் உஸ்மானே டெம்பேலே ஒரு கோல் அடித்த போதிலும், அடுத்த இரண்டு நிமிடங்களில் (90+8') இங்கிலாந்தின் ஜூட் பெலிங்ஹாம் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 6-4 என்ற கணக்கில் முடித்து வைத்தார்.

 

1966-ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றதற்குப் பிறகு, உலகக் கிண்ண தொடர் ஒன்றில் இங்கிலாந்து அணி பெறும் மிகச்சிறந்த தரவரிசை (3-வது இடம்) இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara