Header Logo
Mogo Academy

செய்திகள்
பொலிஸாரை தாக்கிவிட்டு சந்தேகநபர் தப்பிச் சென்ற வாகனம் மீட்பு

Jul 19, 2026 - 03:45 PM -

0

பொலிஸாரை தாக்கிவிட்டு சந்தேகநபர் தப்பிச் சென்ற வாகனம் மீட்பு
Mobitel inner

பிலியந்தலை, போகுந்தர பகுதியில் பொலிஸாரை கூரிய ஆயுதத்தால் இன்று (19) முற்பகல் தாக்கிவிட்டு, சந்தேகநபர் தப்பிச் செல்ல பயன்படுத்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். 

பிலியந்தலை - மஹரகம வீதியில் உள்ள வீடொன்றுக்கு அருகிலுள்ள தோட்டமொன்றில் இருந்து இந்த மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது. 

பிலியந்தலை, போகுந்தர பகுதியில் பொலிஸாரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

கூரிய ஆயுதத் தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேக நபர் ஆகியோர் தற்போது கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

பொரலஸ்கமுவ ஓ.பி.பெரேரா மாவத்தையில் உள்ள வீடொன்றுக்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் கூரிய ஆயுதங்களுடன் வந்த நால்வர், வீட்டில் இருந்தவர்களைத் தாக்கியதுடன் வீட்டுக்கும் பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர். 

பின்னர் குறித்த சந்தேக நபர்கள் பிலியந்தலையை நோக்கி தப்பிச் செல்வதாக பொரலஸ்கமுவ பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதற்கமைவாக, பிலியந்தலை போகுந்தர வீரசிங்க மாவத்தை பகுதியில் பொலிஸார் காவலில் ஈடுபட்டிருந்த போது, தப்பிச் சென்ற இரு சந்தேக நபர்களும் எதிர்பாராத விதமாக பொலிஸாரைக் கண்டதனால் உடனடியாக மோட்டார் சைக்கிளைத் திருப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். 

இதன்போது மோட்டார் சைக்கிளை நிறுத்த பொலிஸ் அதிகாரிகள் பெரும் முயற்சி செய்த நிலையில், மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்தவர் தனது கையில் இருந்த கூரிய ஆயுதத்தால் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரைத் தாக்கியுள்ளார். 

அப்போது கான்ஸ்டபிள் பின்னால் அமர்ந்திருந்தவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதுடன், துப்பாக்கிச் சூடு சந்தேக நபரின் இடுப்புப் பகுதியில் பட்டதில் அவர் மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்துள்ளார். 

உடனடியாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பின்னால் அமர்ந்திருந்தவரை கைது செய்த போதிலும், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பண்டாரகம, வீதியகொட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

இச்சம்பவத்தில் காயமடைந்த சந்தேக நபர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள், அதேபோன்று குறித்த நபர்களின் தாக்குதலுக்கு உள்ளான வீட்டில் இருந்த யுவதி ஒருவரும் தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இச்சம்பவம் தொடர்பில் பிலியந்தலை மற்றும் பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையங்கள் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.


MOST READ

காணொளி
மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

Mobitel Upahara