Header Logo
Mogo Academy

செய்திகள்
தெஹிவளை துப்பாக்கிச் சூடு - வௌிவந்த சிசிடிவி காட்சிகள்

Jul 19, 2026 - 05:53 PM -

0

தெஹிவளை துப்பாக்கிச் சூடு - வௌிவந்த சிசிடிவி காட்சிகள்
Mobitel inner

தெஹிவளை - கல்கிசை 'நிசல செவன' பொது மயானத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வௌியாகியுள்ளன. 

குறித்த துப்பாக்கிச் சூடு இன்று (19) பிற்பகல் 03.25 மணியளவில் நடத்தப்பட்டிருந்தது. 

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர் "சண்டோ" என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் தந்தை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இவர் தெஹிவளை, ஓபன் சைட் மீனவர் குடியிருப்பில் வசிப்பவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

முகத்தை மூடிய தலைக்கவசம் அணிந்து ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் பொது மயானத்திற்குள் நுழைந்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

9mm ரக துப்பாக்கியைப் பயன்படுத்தியே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

துப்பாக்கிச் சூட்டினால் அவரது இடது கை மற்றும் நெஞ்சுப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அவர் தற்போது களுபோவில வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

சந்தேகநபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் செல்லும் காட்சி அங்கிருந்த சிசிடிவி காணொளிகளின் ஊடாக வௌிவந்துள்ளது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

Mobitel Upahara