Jul 19, 2026 - 06:05 PM -
0
அரசாங்கத்தின் 1000 குளங்களை புனரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்டத்தில் 10 குளங்களை முழுமையாகவும் விரைவாகவும் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்காக நேற்று (18) பூர்வாங்க நடவடிக்கையாக, குளங்களை நேரடியாகச் சென்று பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர்.
இதன்போது பொறியியலாளர்கள், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர்கள், குளங்களைச் சேர்ந்த கமக்காரர் அமைப்புகள், பிரஜாசக்தி தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் மாவட்டத்தில் முதலாவதாக மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் இருக்கும் அலிகண்டல் குளத்தை பார்வையிட்டனர்.
இந்தக் குளத்தை முழுமையாக புனரமைப்பு செய்வதன் ஊடாக, விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலங்களில் தொடர்ச்சியாகப் பயிர்ச் செய்கையை சரியான முறையில் நடத்துவதற்குரிய வாய்ப்புக் கிட்டும்.
இக்குளம் ஏற்கனவே 'டித்வா' புயல் காரணமாக முழுமையாக பாதிப்படைந்திருக்கின்றது. எனவே முழுமையாக இது புனரமைப்பு செய்யப்பட இருக்கிறது.
திங்கட்கிழமை மேலும் ஆறு குளங்களை பார்வையிட்டு, விரைவாக அந்த வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
--
