Header Logo
Mogo Academy

செய்திகள்
தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்

Jul 19, 2026 - 09:22 PM -

0

தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்
Mobitel inner

கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்னவுக்கு அருகில் 64 ஆம் மைல்கல் பகுதியில் வைத்து பேருந்தில் இன்று (19) மாலை இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. 

பேருந்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறும் ஏற்பட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

குறித்த பேருந்தில் 20 பயணிகள் பயணித்துள்ளதாக நிலையில், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது. 

பேருந்தில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்ன பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

இந்த வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக காலி நோக்கி பயணிக்கும் வாகனங்களை வெலிப்பன்ன இடம்மாற்றல் பகுதியில் வௌியேற்றி சாதாரண வீதியூடாக பயணிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

Mobitel Upahara