Jul 19, 2026 - 10:07 PM -
0
மொரட்டுவ, ராவத்தவத்தை பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (19) பிற்பகல் மொரட்டுவ பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி அதிவேகமாக பயணித்த இந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியின் நடுவிலிருந்த பாதுகாப்பு வேலியையும் உடைத்துக்கொண்டு, கொழும்பிலிருந்து மொரட்டுவ நோக்கி பயணிக்கும் மற்றைய மருங்குக்குள் நுழைந்து இவ்வாறு கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் காருக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதுடன், விபத்து நடந்த போது அதில் நான்கு பேர் பயணித்துள்ளனர்.
விபத்தில் அவர்கள் எவருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து காரணமாக அந்த வீதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததுடன், சம்பவம் தொடர்பில் மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
