Jul 20, 2026 - 09:10 AM -
0
சர்வதேச தரத்திலான செய்தி அறிக்கையிடலின் உள்நாட்டின் முதல்தர வர்த்தக நாமமான அத தெரண, இந்நாட்டின் செய்தித் துறையை புதிய பரிமாணத்திற்கு இட்டுச் செல்லும் வகையில் தொலைக்காட்சியில் ஆரம்பித்த 'அத தெரண' செய்தி அலைவரிசை இன்றுடன் 12 ஆண்டுகளை நிறைவு செய்து 13 வது ஆண்டில் கால்பதிக்கின்றது.
நம்பகமான மற்றும் நடுநிலையான செய்திகளை வழங்குவதன் மூலம், குறுகிய காலத்திற்குள் அதிக பார்வையாளர்களின் ஈர்ப்பை இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளுக்குள் எம்மால் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.
இந்நாட்டின் செய்தி அறிக்கையிடல் மற்றும் தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை உருவாக்கி, இலங்கையின் முதலாவது மற்றும் ஒரேயொரு செய்தி அலைவரிசையாக 'அத தெரண 24' அலைவரிசை 2014 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி தமது ஒளிபரப்பை ஆரம்பித்தது.
செய்திகள் மற்றும் தற்போதைய நிகழ்வுகள், அரசியல் தகவல்கள், விளையாட்டு, கல்வி, கலை, சுகாதாரம், சமயம் உள்ளிட்ட பல துறைகள் ஊடாக செய்திகள் மற்றும் சமகால நிகழ்வுகள் அனைத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடகமாக விளங்குகின்றது.
நாளொன்றில் 7 மணித்தியால செய்திகளையும் 4 பிரதான செய்திகளை ஒளிபரப்பி மக்களிடம் பல்வேறு தகவல்களை கொண்டு சேர்க்கின்றோம்.
இதற்கு மேலதிகமாக, Ada Derana Mornings, Big Focus, Talk with chatura, Global Angle, To The Point, Art Week, Vehicle Hub, வனிதா வருண உள்ளிட்ட பல அர்த்தமுள்ள நிகழ்ச்சிகளுடனும், நாட்டின் பிள்ளைகளுக்காக 'Ada Derana Education' ஊடாகவும் நாம் பார்வையாளர்களை நெருங்கினோம்.
அத்துடன், இம்முறை 'அத தெரண 24' அலைவரிசையில் ஆங்கில நிகழ்ச்சிகளுக்காக அதிக நேரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதனூடாக Hyde Park, State of the Nation, Showbiz Tonight, Get Real உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், ஆங்கிலப் பார்வையாளர்களுக்காகத் தினமும் இரவு 9 மணிக்கு செய்தி ஒளிபரப்பும், உலகின் நிகழ்வுகளை உங்களிடம் கொண்டுவரும் 'World News' உலகச் செய்தி ஒளிபரப்பு இரவு 9.35 மணிக்கும் 'அத தெரண 24' ஊடாக ஒளிபரப்பப்படுகிறது.
ஆரம்ப காலங்களில் டயலொக் டிவி (Dialog TV) மற்றும் பியோ டிவி (Peo TV) ஊடாக மாத்திரம் ஒளிபரப்பப்பட்ட 'அத தெரண 24' அலைவரிசை, அதன்பின்னர் சாதாரண அண்டனாவின் மூலமும் பார்க்கக்கூடிய வகையில் இலவச அலைவரிசையிலும் இணைக்கப்பட்டது.
அத்துடன், அதிநவீன தொழில்நுட்பத்தை இணைத்து மக்களின் தகவலறியும் உரிமையை உறுதி செய்த 'அத தெரண', இதுவரையில் நாட்டில் ஏற்பட்ட அனைத்து அனர்த்த நிலைமைகளின் போதும் தீர்க்கமான ஊடகப் பணியை நிறைவேற்றியது.
கையடக்கத் தொலைபேசி ஊடகவியலை அதாவது 'MOBILE JOURNALISM' முறையை இந்நாட்டிற்கு அறிமுகப்படுத்தியதில் முன்னோடியாகத் திகழ்வதும் 'அத தெரண' ஆகும்.
இவ்வாறு நிறைவேற்றிய விரிவான ஊடகப் பணியின் காரணமாகவே, 'அத தெரண' இந்நாட்டின் அதிகளவான மக்கள் செய்திகளைப் பார்க்கும் அலைவரிசையாகவும் மாறியது.
'அத தெரண' செய்திகள் பல ஆண்டுகளாக வென்ற இந்த விருதுகள் அதன் சிறப்பைக் காட்டும் சிறந்த உதாரணமாகும்.
இதற்கமைய, இந்த விரிவான ஊடகப் பணியைக் கடந்த ஆண்டுகளில் நிறைவேற்றியதைப் போலவே முன்னெடுத்து, பார்வையாளர்களாகிய உங்களுக்காகச் செய்தி அறிக்கையிடலில் ஈடுபட 'அத தெரண'தொடர்ந்தும் தயாராக உள்ளது என்பதை உறுதியளிக்கிறோம்.
