Header Logo
Mogo Academy

வணிகம்
ஜப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் கைது குறித்து ஐபிஜி நிறுவனம் அறிக்கை

Jul 20, 2026 - 11:54 AM -

0

ஜப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் கைது குறித்து ஐபிஜி நிறுவனம் அறிக்கை
Mobitel inner

லங்கா பிறீமியர் லீக் (எல்பிஎல்) கிரிக்கெட் தொடரின் வணிக மற்றும் நிகழ்வு உரிமைகளைத் கொண்டுள்ள ஐபிஜி (IPG) நிறுவனம், ஜப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் மற்றும் முன்னாள் இந்திய 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி வீரரான மன்ஜோத் கல்ரா விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியான செய்திகள் குறித்து தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக ஐபிஜி நிறுவனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 

லங்கா பிறீமியர் லீக் தொடரின் வணிக உரிமையாளர் என்ற வகையில், இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ளும் தன்னிச்சையான மற்றும் நியாயமான சட்டபூர்வ விசாரணைகளுக்கு ஐபிஜி நிறுவனம் தனது முழுமையான ஆதரவை வழங்கும். அத்துடன், இந்த விசாரணை நடவடிக்கைகளுக்குத் தேவைப்படும் அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கத் தயாராக உள்ளோம். 

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழல் தடுப்புப் பிரிவு, சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் கலந்தாலோசித்து மேற்கொண்ட நம்பகத்தன்மை மற்றும் உரிய ஆய்வு மதிப்பீடுகள் உள்ளிட்ட தேவையான உரிமையாளர் அங்கீகார செயல்முறைகளுக்கு உட்பட்ட பின்னரே, லங்கா பிறீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணி உரிமையாளர்களும் இப்போட்டித் தொடரில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஐபிஜி மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது. 

லங்கா பிறீமியர் லீக் தொடரின் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை மிக முக்கியமானவை ஆகும். போட்டிகளின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் எந்தவொரு ஊழல் அல்லது நெறிமுறையற்ற செயல்களுக்கும் எமது நிர்வாகத்தில் இடமில்லை என்ற கொள்கையை ஐபிஜி நிறுவனம் உறுதியாகப் பின்பற்றுகிறது. 

ரசிகர்கள், அணி உரிமையாளர்கள், அனுசரணையாளசர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் வணிகக் கூட்டாளர்கள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும், 2026 லங்கா பிறீமியர் லீக் தொடர் திட்டமிட்டபடி தடையின்றி நடைபெறும் என்று நாங்கள் மீண்டும் உறுதியளிக்க விரும்புகிறோம். மிக உயரிய நிர்வாகத் தரநிலைகள் மற்றும் விளையாட்டு நேர்மைத்தன்மையைப் பேணி, உலகத்தரம் வாய்ந்த ஒரு போட்டித் தொடரை வழங்குவதில் நாங்கள் முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளோம். 

போட்டித் தொடர் முழுவதும் வலுவான நேர்மை நடவடிக்கைகளை ஆதரிப்பதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம், தொடரின் ஊழல் தடுப்புப் பிரிவு, நேர்மை வழிகாட்டிகள் மற்றும் அனைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் ஐபிஜி றிறுவனம் தொடர்ந்து நெருக்கமாக இணைந்து பணியாற்றும். 

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடந்து வரும் தற்போதைய சூழ்நிலையில், இது குறித்து மேலும் கருத்து தெரிவிப்பது பொருத்தமற்றதாக இருக்கும். ஐபிஜி நிறுவனம் இந்த நிலவரங்களைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், தேவைப்படும் பட்சத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து உரிய அறிவிப்புகளை வழங்கும்.


MOST READ

காணொளி
மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

Mobitel Upahara