Header Logo
Mogo Academy

உலகம்
பங்களாதேஷ் பெண்களை திருமணம் செய்தால் மரண தண்டனை!

Jul 20, 2026 - 11:55 AM -

0

பங்களாதேஷ் பெண்களை திருமணம் செய்தால் மரண தண்டனை!
Mobitel inner

கடந்த 2020 ஆம் ஆண்டு சீன மக்​கள் தொகை கணக்கெடுப்பின்​ படி, பெண்​களை விட திருமண வயதில் உள்ள ஆண்​கள் சுமார் 1.75 கோடி அதி​க​மாக உள்​ளனர். இதனால், அவர்கள் வெளி​நாடு​களில் சட்​ட​விரோத தரகர்​கள் மூலம் பெண்களை மணம்​ முடிக்​கும் போக்கு அதி​கரித்து வரு​கிறது. 

சீன உச்ச நீதி​மன்​றத்​தகவல்​படி, கடந்த 2024 ஜனவரி முதல் 2025 மார்ச் வரை மட்​டும், திருமண மோசடி மற்​றும் மனிதக் கடத்​தலில் ஈடு​பட்ட 1,546 பேர் சீனா​வில் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். பெரும்​பாலான வழக்​கு​களில், சீன ஆண்​கள் ஆயிரக்​கணக்​கான யுவான் பணத்​தைக் கொடுத்து திரு​மணம் செய்த வெளி​நாட்​டுப் பெண்கள் சில நாட்​களி​லேயே காணா​மல் போய்​விடு​வ​தாக​வும், சில இடங்​களில் வெளி​நாட்​டுப் பெண்​கள் கடத்​தப்​பட்டு சீன ஆண்களைத் திரு​மணம் செய்ய வற்​புறுத்​தப்​படு​வ​தாக​வும் புகார்கள் எழுந்​துள்​ளன. 

இதன் காரண​மாக, பங்களாதேஷ் தவிர ஏற்​கெனவே வியட்​நாம், மியான்​மர், லாவோஸ், பாகிஸ்​தான் மற்​றும் நேபாளம் ஆகிய நாடு​களி​லும் உள்ள சீனத் தூதரகங்​கள் திருமண மோசடி குறித்து எச்​சரிக்​கைகளை விடுத்​துள்​ளன. இந்த நிலை​யில், சீனாவைச் சேர்ந்த ஆண்​கள் பலர் பங்களாதேஷி​ற்கு வந்​து, இடைத்​தரகர்​கள் மூலம் பெண்​களைப் பணம் கொடுத்து வாங்​கு​வ​தாக புகார்​கள் எழுந்​துள்​ளது. 

இதைத் தொடர்ந்து பங்களாதேஷில் உள்ள சீன தூதரகம் கூறியுள்ள​தாவது, பங்களாதேஷ் சட்​டத்​தின்​படி மனிதக் கடத்​தல் வழக்​கு​களில் மிகக் கடுமை​யான குற்​றங்​களுக்கு ஆயுள் தண்டனை அல்​லது மரண தண்​டனை வரை விதிக்​கப்பட வாய்ப்புள்​ளது. இக்​குற்​றத்​தில் ஈடு​படு​பவர்​களுக்​குக் குறைந்தபட்சம் 7 ஆண்​டு​கள் சிறைத்​தண்​டனை​யும், சுமார் 3.95 லட்​சம் ரூபா அபராத​மும் விதிக்​கப்​படும். 

மேலும், திரு​மணக் கடத்​தல் குற்​றங்​களுக்​குத் தூண்​டு​தலாகவோ அல்​லது உடந்​தை​யாகவோ இருப்​பவர்​களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை, 15,600 ரூபா அபராத​ம் விதிக்​கப்​படும். திருமணங்​கள் உண்​மை​யான அன்​புட​ன் அமைய வேண்​டும். பெண்​களைப் பணம் கொடுத்து வாங்​கு​வது பிற்​காலத்​தில் கடுமை​யான நிதி இழப்​புக்​கும், உயிருக்கே ஆபத்​தான சூழ்நிலைகளுக்​கும்​ வழி​வகுக்​கும்​. இவ்​வாறு சீன தூதரகம்​ கூறியுள்​ளது.


MOST READ

காணொளி
மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

Mobitel Upahara