Header Logo
Mogo Academy

வணிகம்
அமானா வங்கியின் இரத்தினபுரி மாவட்டத்தின் முதலாவது சுய வங்கிச் சேவை நிலையம் பலாங்கொடயில் திறப்பு

Jul 20, 2026 - 12:09 PM -

0

அமானா வங்கியின் இரத்தினபுரி மாவட்டத்தின் முதலாவது சுய வங்கிச் சேவை நிலையம் பலாங்கொடயில் திறப்பு
Mobitel inner

இலங்கை முழுவதிலும் அணுகக்கூடிய மற்றும் சௌகரியமான வங்கிச் சேவைகளை விரிவாக்கம் செய்யும் தனது அர்ப்பணிப்புக்கமைய, அமானா வங்கி தனது 46ஆவது சுய வங்கிச் சேவை நிலையத்தை பலாங்கொட நகரில் திறந்துள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள முதலாவது சுய வங்கிச் சேவை நிலையமாகவும் இது அமைந்துள்ளது. 

இல. 321A, இரத்தினபுரி வீதி, பலகஹாமுல்ல, பலாங்கொட எனும் முகவரியில் அமைந்துள்ள இந்த சுய வங்கிச் சேவை நிலையம், வாடிக்கையாளர்களுக்கு 24/7 நேரமும் அத்தியாவசிய வங்கிச் சேவை வசதிகளான பண மீளப் பெறல்கள், பண வைப்புகள் மற்றும் காசோலை வைப்புகள் ஆகியவற்றை அணுகும் வசதியை வழங்கி, தனிநபர்கள், வியாபாரங்கள் மற்றும் பிரதேசத்தின் பரந்த சமூகத்தாருக்கு சௌகரியத்தை சேர்க்கின்றது. 

அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களில் பலாங்கொட பிரதம பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு டி கே சி நவரத்ன மற்றும் பலாங்கொட பெரிய ஜும்மா மஸ்ஜித் பிரதம இமாம் அஷ் ஷேக் ரஷாத் சமான் ரஹ்மானி ஆகியோருடன், சமூக தலைவர்கள், வியாபார பிரதிநிதிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர். அமானா வங்கியின் சார்பாக நிகழ்வில் பிராந்தியம் 2 உதவி உப தலைவர் அசாம் அமீர், இரத்தினபுரி கிளை முகாமையாளர் அசீஸ் ஜுனைதீன் மற்றும் இதர அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

நிகழ்வில் உதவி உப தலைவர் அசாம் அமீர் உரையாற்றுகையில், “எமது வங்கிச் சேவை வலையமைப்பை பலாங்கொட பகுதிக்கு விஸ்தரித்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். இதனூடாக இரத்தினபுரி மாவட்டத்தில் எமது முதலாவது சுய வங்கிச் சேவை நிலையத்தை நிறுவியுள்ளோம். நவீன வங்கிச் சேவை தீர்வுகளினூடாக, அணுகல் திறன் மற்றும் சௌகரியம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான எமது அர்ப்பணிப்பை இந்த நடவடிக்கை பிரதிபலித்துள்ளதுடன், சூழவுள்ள சமூகத்தாரின் நிதித் தேவைகளை நிவர்த்தி செய்வதில் ஆதரவளிக்கிறோம்.” என்றார். 

திறப்பு விழாவின் அங்கமாக, அமானா வங்கி சமூக ஈடுபாட்டு செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது. அதில் பிரதேசத்தைச் சேர்ந்த குறைந்த வசதிகள் படைத்த Marketing & Corporate Communications Department முன்பள்ளிகளுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதுடன், சமூக பொறுப்புணர்வு மற்றும் சமூக அபிவிருத்தி போன்றவற்றுக்கான தனது அர்ப்பணிப்பை மீள உறுதி செய்திருந்தது. 

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக ஏசியன் பாங்கர் அமைப்பினால் தரப்படுத்தப்பட்டிருந்தது. அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.


MOST READ

காணொளி
மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

Mobitel Upahara