Header Logo
Mogo Academy

விளையாட்டு
ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய பாகிஸ்தான் வீரர்!

Jul 20, 2026 - 12:29 PM -

0

ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய பாகிஸ்தான் வீரர்!
Mobitel inner

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற டி20 உலக கிண்ண போட்டியின் போது, ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டி தொடர்ந்து பாகிஸ்தான் நட்சத்திர சகலத்துறை வீரரான முகமது நவாஸுக்கு ஐசிசி மூன்று மாதங்கள் விதித்த தடையை தற்போது இரத்து செய்துள்ளது. 

இலங்கையில் இந்த ஆண்டு பிப்ரவரி 7 ஆம் திகதி நெதர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 உலக கிண்ண போட்டிக்கு பிறகு, பாகிஸ்தான் அணி வீரர் முகமது நவாஸ் ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். 

இதையடுத்து கஞ்சா உட்கொண்ட பிறகு கல்லீரலில் உருவாகும் செயலற்ற வளர்சிதை மாற்ற பொருளான கார்பாக்ஸி-THC, அவரின் உடலில் இருந்தது சோதனை மூலம் கண்டறியப்பட்டது. 

இதைத்தொடர்ந்து நவாஸ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு, அந்த பொருளை போட்டிக்கு வெளியே உட்கொண்டதாகவும், போட்டியின் செயல்திறனுக்காக பயன்படுத்தவில்லை என்றார். மேலும், ஐசிசி-யின் தண்டனையை ஏறு்றுக் கொள்ளவதாகவும் தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து ஐசிசி கடந்த மே மாதத்தில் இருந்து அவருக்கு 3 மாதக்காலம் தடைவிதித்தது. இதில் இரண்டரை மாதக் காலம் புனர்வாழ்வு (rehabilitation) திட்டத்தில் சிகிச்சை மேற்கொண்டு சிறப்பாக அந்த காலக்கட்டத்தை முடித்தால், தண்டனை ஒரு மாதக்காலமாக குறைக்கப்படும் என்றது ஐசிசி. 

ஐசிசி-யின் நிபந்தனையின்படி, வெற்றிகரமாக புனர்வாழ்வு காலத்தை முடித்தார். இதனைத் தொடர்ந்து, குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன், புனர்வாழ்வு சிகிச்சையையும் வெற்றிகரமகா முடித்ததால், ஒரு மாதக்காலம் தடை தேவையில்லை என்று ஐசிசி அவர் மீதான தடையை ரத்து செய்தது. இதனால் அவர் இனிமேல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியும்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

Mobitel Upahara