Header Logo
Mogo Academy

வணிகம்
பிராந்திய செயல்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில், BYD நிறுவனத்தின் உலகளாவிய துணைத் தலைவர் இலங்கைக்கு விஜயம்

Jul 20, 2026 - 01:17 PM -

0

பிராந்திய செயல்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில், BYD நிறுவனத்தின் உலகளாவிய துணைத் தலைவர் இலங்கைக்கு விஜயம்
Mobitel inner

இலங்கையில் BYD மற்றும் DENZA வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ (JKCG Auto) BYD நிறுவனம் அதன் உலகளாவிய துணைத் தலைவர் லியு சூலியாங் (Liu Xueliang) அவர்களை அண்மையில் இலங்கைக்கு வரவேற்றது. விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகளில் இரு வர்த்தக நாமங்களும் அடைந்துள்ள சிறப்பான வளர்ச்சியை மதிப்பாய்வு செய்யும் நோக்கில் இந்த உத்தியோகபூர்வ விஜயம் அமைந்திருந்தது. புதிய ஆற்றல்மிக்க சக்தி போக்குவரத்துக்கான இலங்கையின் மாற்றம் மற்றும் உலகளாவிய ரீதியில் இந்த மாற்றத்தில் இலங்கையின் பங்களிப்பு ஆகியவற்றின் மீது BYD கொண்டுள்ள நீண்டகால நம்பிக்கையை இந்த விஜயம் பிரதிபலிக்கிறது. 

இந்த விஜயம் குறித்து கருத்துத் தெரிவித்த BYD இன் துணைத் தலைவர் லியு சூலியாங், “தெற்காசியாவிற்கான BYD இன் பிராந்திய பார்வையில் இலங்கை ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தைப் பெற்றுள்ளது. இந்த சந்தையின் திறனை நாம் எவ்வளவு முக்கியத்துவத்துடன் நோக்குகிறோம் என்பதைத் தீர்மானமாக பிரதிபலிக்கிறது. எமது மதிப்புமிக்க இலங்கை வாடிக்கையாளர்கள் BYD மற்றும் DENZA மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நாங்கள் நன்றியுடையவர்களாக இருக்கிறோம். உலகளவில் எமக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்த அதே தரமான தயாரிப்புகளையும், தொழில்நுட்பங்களையும், வலுவான வாடிக்கையாளர் ஆதரவுடன் தொடர்ந்து வழங்குவதே எமது நோக்கமாகும். அத்துடன், எமது வர்த்தக நாமத்தை இலங்கையில் மிகச்சிறப்பாகக் கொண்டு சேர்த்துள்ள JKCG Auto குழுவினரின் சிறப்பான பணிகளையும் நாங்கள் பாராட்டுகிறோம்,” என்றும் அவர் மேலும் கூறினார். 

புதிய ஆற்றல்மிக்க சக்தியின் வாகன சந்தையில் உலகளாவிய முன்னணியாளராக BYD சாதனை படைத்து வரும் பின்னணியில் அவரது இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது. இந்நிறுவனம் 2025 இல் 4.6 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்திருந்ததுடன், 2026 இலும் அந்த சாதனையை முறியடிக்கும் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. 

மேலும், ஜெர்மனியின் வாகன முகாமைத்துவ மையத்தினால் (CAM) வெளியிடப்பட்ட Automotive INNOVATIONS Report 2026 அறிக்கையில், BYD உலகின் அதிநவீன கண்டுபிடிப்புகளைக் கொண்ட வாகனக் குழுமம் (World's Most Innovative Automotive Group) என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இவ்விருதுகளின் 21 வருட வரலாற்றில் சீன வாகன உற்பத்தியாளர் ஒருவர் முதலிடத்தைப் பிடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். 

இலங்கைச் சந்தையிலும் BYD மிக வேகமாக வாடிக்கையாளர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. வாகன இறக்குமதிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட ஒன்பது மாதங்களுக்குள், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஒட்டுமொத்த புதிய வாகனங்களில் சுமார் 37%பங்கையும், மின்சார வாகன (EV) பதிவுகளில் 70%-க்கும் அதிகமான பங்கையும் BYD தன்வசப்படுத்தியுள்ளது. இந்த அசுர வளர்ச்சி, தூய்மையான மற்றும் நிலையான போக்குவரத்து தீர்வுகளுக்கான வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்து, தெற்காசியாவில் BYD இன் மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றாக இலங்கையை மாற்றியுள்ளது. 

தனது விஜயத்தின் போது, திரு. லியு JKCG Auto குழுவினருடன் இணைந்து இலங்கையில் BYD இன் விற்பனை, சார்ஜிங் உட்கட்டமைப்பு, விற்பனைக்குப் பிந்தைய செயல்பாடுகள், தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த புதிய சக்தி வாகன சூழலமைப்பை ((Ecosystem) மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினார். மேலும், DENZA வாடிக்கையாளர்களுடனான ஒரு பிரத்தியேக மாலை நேர சந்திப்பிலும் அவர் கலந்துகொண்டு, வாகன உரிமையாளர்களுடன் வாகன ஓட்டுதல் அனுபவத்தைபயும் பகிர்ந்து கொண்டார் இது குறித்து ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ (JKCG Auto) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சரித் பண்டிதரத்ன கருத்துத் தெரிவிக்கையில், “புதிய ஆற்றல்மிக்க சக்தி போக்குவரத்து குறித்த உலகளாவிய பார்வையை BYD மாற்றியமைத்துள்ளது. அதேபோல், இலங்கையும் வெறும் ஓராண்டிற்குள் மிக வேகமான புதிய சக்தி வாகன மாற்றத்தின் சாத்தியக்கூறுகளை உணர்ந்து வருகிறது. இந்தப் பிண்ணனியில் திரு. லியு அவர்களின் வருகை, JKCG Auto மற்றும் இலங்கை சந்தை மீது BYD கொண்டுள்ள நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்துகிறது. சந்தை அணுகல், சேவைத் தயார்நிலை, சார்ஜிங் வசதிகள் மற்றும் தொழில்நுட்பத் திறன் என அடுத்தகட்ட புதிய சக்தி வாகன மாற்றத்திற்குத் தேவையான உள்ளூர் தளத்தை நாங்கள் இணைந்து உருவாக்கி வருகிறோம்,” என்றார். 

BYD மற்றும் JKCG Auto இடையிலான இந்த தொடர்ச்சியான ஒத்துழைப்பு, இலங்கையில் நிலையான போக்குவரத்தை நோக்கி நகர்வதை துரிதப்படுத்துவதுடன், நாட்டின் வாகனத் துறையின் பரந்த வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப, BYD இன் உலகளாவிய தொழில்நுட்பத் தலைமையையும், JKCG Auto இன் உள்ளூர் சந்தை அனுபவத்தையும் இணைத்து, இலங்கையை தூய்மையான மற்றும் நவீன போக்குவரத்து யுகத்தை நோக்கி வழிநடத்த இரு நிறுவனங்களும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றன.


MOST READ

காணொளி
மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

Mobitel Upahara