Header Logo
Mogo Academy

வணிகம்
இலங்கை கட்டிடக்கலையின் எதிர்காலத்தை சிறப்பிக்க LANKATILES மற்றும் ஜெஃப்ரி பாவா அறக்கட்டளை ஆகியன இணைந்து செயல்படுகின்றன

Jul 20, 2026 - 03:45 PM -

0

இலங்கை கட்டிடக்கலையின் எதிர்காலத்தை சிறப்பிக்க LANKATILES மற்றும் ஜெஃப்ரி பாவா அறக்கட்டளை ஆகியன இணைந்து செயல்படுகின்றன
Mobitel inner

கட்டிடக்கலை, வடிவமைப்புச் சிறப்பு மற்றும் இலங்கை வாழ்விடங்களின் முன்னேற்றம் ஆகியவற்றில் தனது நீண்டகால அர்ப்பணிப்பை வலுப்படுத்தும் விதமாக, LANKATILES நிறுவனம் ஜெஃப்ரி பாவா அறக்கட்டளையுடன் ஒரு மூலோபாயக் கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளமை குறித்து அறிவித்துள்ளது. இந்தக் கூட்டாண்மையானது, அறக்கட்டளையின் DesignTalk தளம் என அழைக்கப்படுகின்ற, ஜெஃப்ரி பாவா வருடாந்த நினைவு சொற்பொழிவு மற்றும் இலங்கையின் கட்டிடக்கலை சமூகத்திற்கு தொடர்ந்து உத்வேகம் அளித்து அவர்களை வளர்க்கும் பிற அறிவுப் பகிர்வு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும். 

இந்தக் கூட்டாண்மையானது, அர்த்தமுள்ள உரையாடல், ஆக்கப்பூர்வமான பரிமாற்றம் மற்றும் இலங்கையில் கட்டிடக்கலையின் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சி ஆகியவற்றில் உள்ள ஒரு பகிரப்பட்ட அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. ஜெஃப்ரி பாவாவின் நீடித்த பாரம்பரியத்துடன் இணைந்து, எதிர்காலத் திறமைகளை வளர்க்கும் தளங்களை ஆதரிக்கவும், நாட்டின் கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு சமூகத்துடனான தனது ஈடுபாட்டை வலுப்படுத்தவும் LANKATILES முயல்கிறது. இந்தக் கூட்டுமுயற்சி குறித்து கருத்து வெளியிட்ட LANKATILES PLC-யின் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரியந்த தல்வத்த அவர்கள் “கட்டிடக்கலை என்பது இடங்கள், கலாச்சார அடையாளம் மற்றும் நீடித்த மரபுகளை வடிவமைக்கிறது என்ற எங்கள் பொதுவான நம்பிக்கையை ஜெஃப்ரி பாவா அறக்கட்டளையுடனான எங்கள் கூட்டணி பிரதிபலிக்கிறது. எதிர்காலக் கட்டிடக் கலைஞர்களை ஊக்குவிக்கும் மற்றும் நீடித்து நிலைபெறும் வடிவமைப்பு கலாச்சாரத்திற்குப் பங்களிக்கும் ஒரு சமூகத்தை ஆதரிப்பதில் LANKATILES பெருமிதம் கொள்கிறது. 

ஜெஃப்ரி பாவா மற்றும் லுணுகங்க அறக்கட்டளைகளின் தலைவர் சன்ன தஸ்வத்த அவர்கள் இது தொடர்பில் மேலும் கூறுகையில், “இயற்கை மற்றும் கட்டமைக்கப்பட்ட சூழலுடன் தொடர்புடைய கண்காட்சிகள், சொற்பொழிவுகள் மற்றும் களப்பயணங்கள் உள்ளிட்ட, ஆண்டு முழுவதும் நடைபெறும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளை இந்த அறக்கட்டளை ஆதரிக்கிறது. அறக்கட்டளையுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், இந்த முக்கியமான பணிகளை ஆதரிப்பது மட்டுமல்லாமல், இந்நிகழ்ச்சிகளை விரிவுபடுத்தவும், இலங்கையின் கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்புச் சமூகத்திற்கு ஆதரவளிக்கவும் LANKATILES உதவுகிறது. 

ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக, உலகத்தரம் வாய்ந்த டைல்ஸ் மற்றும் மேற்பரப்புத் தீர்வுகளை சிந்தனைமிக்க வடிவமைப்பு, கைவினைத்திறன், புத்தாக்கம், அறிவூட்டல் மற்றும் தொழில்சார் கூட்டணிகள் மீதான அர்ப்பணிப்புடன் இணைத்து LANKATILES செயல்பட்டு வந்துள்ளது. இவை அனைத்தும் இலங்கை மக்கள் இடங்களை வடிவமைக்கும், உருவாக்கும் மற்றும் அனுபவிக்கும் விதத்தை மேம்படுத்தியுள்ளன. இந்தக் கூட்டுமுயற்சியானது, வடிவமைப்பு என்பது கட்டிடங்களைத் தாண்டி சமூகங்கள், கலாச்சாரம் மற்றும் நீடித்த மரபுகளை வடிவமைக்கிறது என்ற நிறுவனத்தின் நம்பிக்கையை வலுப்படுத்துவதுடன், இலங்கையின் கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்புத் துறையை மேம்படுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பையும் மேலும் உறுதிப்படுத்துகிறது. 

1982-ஆம் ஆண்டில் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞரால் நிறுவப்பட்ட ஜெஃப்ரி பாவா அறக்கட்டளை, இலங்கை மற்றும் வெளிநாடுகளில் கட்டிடக்கலை, கலைகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகளை ஊக்குவிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. 2003-இல் ஜெஃப்ரி பாவா காலமானதிலிருந்து, இவ்வறக்கட்டளையானது அவரது ஆவணங்களைப் பாதுகாத்து வருவதோடு, இயற்கை மற்றும் கட்டமைக்கப்பட்ட சூழல்கள் மற்றும் கலைகள் குறித்த பரந்த அளவிலான கலந்துரையாடல்களை முன்னெடுக்கும் பொது நிகழ்ச்சிகளையும் ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடத்தி வருகிறது. இத்தகைய முன்னெடுப்புகள் கட்டிடக் கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிப்பதோடு, பல்வேறு தலைமுறையினரிடையே கருத்துப் பரிமாற்றத்திற்கான அர்த்தமுள்ள வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன.


MOST READ

காணொளி
மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

Mobitel Upahara