Header Logo
Mogo Academy

விளையாட்டு
உலகக் கிண்ண கால்பந்து வெற்றி கொண்டாட்டத்தில் துயரம்!

Jul 20, 2026 - 05:45 PM -

0

உலகக் கிண்ண கால்பந்து வெற்றி கொண்டாட்டத்தில் துயரம்!
Mobitel inner

உலகக் கிண்ண கால்பந்து வெற்றி கொண்டாட்டத்தின்போது, ஸ்பெயினில் நீருற்றின் ஒரு பகுதி திடீரென சரிந்து சிறுவன் பலியானான். 

48 அணிகள் பங்கேற்ற பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா - ஸ்பெயின் அணிகள் விளையாடின. இப்போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. 

இதனை பயன்படுத்தி கொண்ட ஸ்பெயின் வீரர் பெரன் டாரஸ், கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் (106 ஆவது நிமிடம்) கோல் அடித்தது அணி வெற்றி பெறுவதற்கு ஏதுவானது. அதன்பின்னர் இரு அணிகளுக்கும், கோல் அடிக்கும் முயற்சி பலன் தரவில்லை. 

இதனால், அர்ஜென்டினாவை 1 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக் கிண்ணத்தை ஸ்பெயின் வென்றது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப்பும், பிபா தலைவர் கியானி இன்பான்டினோவும் சேர்ந்து பிபா உலகக் கிண்ணத்தை ஸ்பெயின் அணியிடம் வழங்கினர். 

இதனை அடுத்து, ஸ்பெயின் அணியின் இந்த வெற்றியை அந்நாட்டின் பல்வேறு நகரங்களிலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இதில், போர்த்துக்கல் நாட்டை ஒட்டி அமைந்த சலமான்கா மாகாணத்தில் மேற்கு நகரான சியூடேட் ரோட்ரிகோவில் நள்ளிரவுக்கு பின்னர் வெற்றி கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ஈடுபட்டு இருந்தனர். 

அப்போது, நீருற்றின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்தது. அதில் சிக்கி 13 வயது சிறுவன் பலத்த காயமடைந்து, சிகிச்சை பலனின்றி பலியானான். தவிர, 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் 16 ஆண்டுகள் கழித்து 2 ஆவது முறையாக ஸ்பெயின் அணி கிண்ணத்தை வெற்றி பெற்றதற்காக நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடந்து வரும் சூழலில் நடந்த இந்த துயர சம்பவம், பெரும் சோகம் ஏற்படுத்தியுள்ளது.


MOST READ

காணொளி
மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

Mobitel Upahara