Jul 20, 2026 - 05:45 PM -
0
Vietjet, தனது புதிய கொழும்பு - Ho Chi Minh City இடையிலான விமானப் பாதையில், அனைத்து வரிகள் மற்றும் கட்டணங்கள் உள்ளடங்கலாக ஒரு வழிக்கட்டணமாக 90 அமெரிக்க டொலர்கள் முதலான Eco சலுகைக் கட்டணங்கள் மற்றும் 20 கிலோகிராம் இலவசப் பதிவுசெய்யப்பட்ட பயணப்பொதி வசதியுடன் கூடிய வரையறுக்கப்பட்ட காலப்பகுதிக்கான விசேட சலுகையொன்றை அறிமுகப்படுத்துகிறது. இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான தொடர்பை ஏற்படுத்தும் Vietjet இன் முதலாவது திட்டமிடப்பட்ட விமானச் சேவையான இப்பாதை, 2026 ஆகஸ்ட் 18 ஆம் திகதி முதல் தனது சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.
இந்தச் சலுகை, 2026 ஜூலை 20 ஆம் திகதி இரவு 22:30 மணிக்கு ஆரம்பமாகி, 2026 ஜூலை 23 ஆம் திகதி இரவு 21:30 மணி வரை (இலங்கை நேரப்படி) செல்லுபடியாகும். இதற்கான பயணச் சீட்டுகளை www.vietjetair.com என்ற இணையத்தளத்தின் மூலமாகவோ அல்லது “Vietjet Air” மொபைல் app இன் மூலமாகவோ பதிவு செய்துகொள்ள முடியும். பயணச்சீட்டைப் பதிவு செய்யும் போது 20 கிலோகிராம் checked baggage தெரிவை மேற்கொள்ளும் பயணிகள், தங்களது பயணச்சீட்டு வகுப்பைப் பொருட்படுத்தாமல் அதனை இலவசமாகப் பெற்றுக்கொள்வர். இச்சலுகை 2026 ஆகஸ்ட் 18 ஆம் திகதி முதல் 2027 மார்ச் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலான பயணங்களுக்கு செல்லுபடியாகும் (சில குறிப்பிட்ட தடைசெய்யப்பட்ட திகதிகள் தவிர்த்து).
செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வாரத்திற்கு மூன்று முறை இயங்கும் இந்த புதிய விமானச் சேவை, கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இரவு 23:00 மணிக்குப்புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 05:55 மணிக்கு Ho Chi Minh City இலுள்ள Tan Son Nhat சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைகிறது. மறுமார்க்கமாக, Ho Chi Minh City இலிருந்து மாலை 18:15 மணிக்குப் புறப்படும் விமான சேவை, இரவு 21:50 மணிக்குக் கொழும்பை வந்தடையும். (அனைத்தும் அந்தந்த உள்ளூர் நேரங்களாகும்).
இந்த புதிய விமானப் பாதை, Ho Chi Minh City இன் துடிப்பான உணவுப் கலாசாரம், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் மற்றும் நவீன வானளாவிய கட்டிடங்கள் ஆகியவற்றை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பை இலங்கைப் பயணிகளுக்கு வழங்குவதுடன்; Vietjet இன் விரிவான விமானப் பிணையம் ஊடாக வியட்நாம் முழுவதும் மற்றும் பரந்த ஆசிய-பசிபிக் பிராந்தியம் முழுவதற்கும் தடையற்ற தொடர் இணைப்புச் சேவைகளையும் வழங்குகிறது. Ho Chi Minh City இலிருந்தபடி பயணிகள் அவுஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா, சீனா, சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் அதற்கு அப்பாலுள்ள பல இடங்களுக்கும் இலகுவாகத் தொடர் பயணங்களை மேற்கொள்ள முடியும்.
இந்த விமானச் சேவை, இலங்கையின் கடற்கரைகள், தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த மலைநாடுகள் மற்றும் வனவிலங்கு வலயங்களை நோக்கி அதிகளவிலான வியட்நாமிய மற்றும் பிராந்தியப் பயணிகளை ஈர்ப்பதற்கு வழிவகுப்பதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான இருவழிச் சுற்றுலா வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.
Vietjet விமான சேவையில் பயணிப்போர் நவீனரக விமானக் குழுமம், தொழில்முறை ஆகாய விமான பணிப்பெண்களின் உபசரிப்பு மற்றும் pho, banh mi போன்ற வியட்நாமிய விசேட உணவுகள் உள்ளடங்கலாகச் சூடான உணவு வகைகள், Vietjet iced milk coffee ஆகியவற்றை சுவைக்க முடியும். மேலும், Vietjet SkyJoy சலுகைத்திட்டத்தின் உறுப்பினர்கள் Vietjet சேவைகளின் மூலமும்; சுற்றுலா, உணவகங்கள், கொள்வனவுகள் மற்றும் வாழ்வியல் சார்ந்த 250க்கும் மேற்பட்ட பங்குதாரர் வர்த்தகநாமங்கள் மூலமும் வெகுமதிப் புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளவும் மீளப்பயன்படுத்தவும் முடியும் வியட்நாம் அழைக்கின்றது, Vietjet இல் பயணிப்போம்!
Vietjet பற்றி:
புதுயுக விமானச் சேவை நிறுவனமான Vietjet, வியட்நாமின் வான்வழித் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பிராந்திய அளவிலும் உலகளாவிய ரீதியிலும் ஒரு முன்னோடி விமானச் சேவையாகத் திகழ்ந்து வருகின்றது. இந்நிறுவனம் தற்போது 135 விமானங்களைக் கொண்ட கட்டமைப்பை இயக்கி வருவதுடன், பரந்த மற்றும் குறுகிய உடல் அமைப்பைக் கொண்ட இருவகை விமானங்களையும் உள்ளடக்கியதாக கிட்டத்தட்ட 600 புதிய விமானங்களுக்கான கொள்வனவுப் பதிவுகளையும் மேற்கொண்டுள்ளது. செலவின முகாமைத்துவத் திறன், பயனுள்ள செயல்பாடுகள் மற்றும் செயற்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுடன், அனைத்து நடவடிக்கைகளிலும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தி புதிய போக்குகளுக்குத் தலைமை வகிக்கும் Vietjet, வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பலதரப்பட்ட சேவைகளுடன் கூடிய கட்டணச் சேமிப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மை மிக்க வான்வழிப் பயண வாய்ப்புகளை வழங்குகின்றது.
Vietjet நிறுவனம், சர்வதேச வான்வழிப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) செயற்பாட்டு பாதுகாப்பு கணக்காய்வு (IOSA) சான்றிதழைப் பெற்ற ஒரு முழு அளவிலான அங்கத்துவ நிறுவனமாகும். வியட்நாமின் மிகப்பெரிய தனியார் விமானச் சேவை நிறுவனமான இதற்கு, உலகின் ஒரே ஒரு பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு மதிப்பீட்டு இணையத்தளமான airlineratings.com நிறுவனத்தினால் பாதுகாப்பிற்கான மிக உயர்ந்த 7 நட்சத்திர அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், Airfinance Journal இனால் தொடர்ந்து பல வருடங்களாக ஆரோக்கியமான நிதிநிலை மற்றும் செயல்பாடுகளைக் கொண்ட உலகின் சிறந்த 50 விமானச் சேவை நிறுவனங்களில் ஒன்றாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன், Skytrax, CAPA, Airline Ratings போன்ற புகழ்பெற்ற சர்வதேச அமைப்புகளினால் உலகின் சிறந்த குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனம் எனவும் Vietjet பலமுறை பெயரிடப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு பார்க்கவும் www.vietjetair.com
