Header Logo
Mogo Academy

வணிகம்
செலான் வங்கி அநு/புத்தங்கல மத்திய கல்லூரியில் தனது 291ஆவது ‘பஹசர’ நூலகத்தை திறந்ததன் ஊடாக நிதியறிவு மிக்க எதிர்காலத்தை ஆதரிக்கிறது

Jul 20, 2026 - 05:51 PM -

0

செலான் வங்கி அநு/புத்தங்கல மத்திய கல்லூரியில் தனது 291ஆவது ‘பஹசர’ நூலகத்தை திறந்ததன் ஊடாக நிதியறிவு மிக்க எதிர்காலத்தை ஆதரிக்கிறது
Mobitel inner

செலான் வங்கி பிஎல்சி, தனது முதன்மையான சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை (ESG) முயற்சியில் மற்றொரு மைல்கல்லாக பதவிய-பராக்கிரமபுரத்தில் உள்ள அநு/புத்தங்கல மத்திய கல்லூரியில் தனது 291ஆவது ‘பஹசர’நூலகத்தை திறந்து வைத்துள்ளது. இவ்விழா 2026 மார்ச் 27 அன்று, கெபிதிகொல்லாவ வலயக் கல்விப் பணிப்பாளர் ருவன் மைத்திரிபால, பதவிய கல்விப் பிரிவுப் பணிப்பாளர் T.P.ஜயசிங்க, பதவிய அநு/புத்தங்கல மத்திய கல்லூரியின் அதிபர் கபில S. குமார, செலான் வங்கியின் வட மத்திய மாகாண பிராந்திய முகாமையாளர் ஜனந்த ரத்நாயக்க மற்றும் பதவிய கிளை முகாமையாளர் நீல் நிஷாந்த ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. 

புதிதாகப் புனரமைக்கப்பட்ட நூலகம், செலான் வங்கியும் பாடசாலையும் இணைந்து நடத்திய ‘பஹசர வாரத்தின்’ (Pahasara Week) நிறைவைத் தொடர்ந்து உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. இவ் வாரம் முழுவதும் மாணவர்களை மையமாகக் கொண்ட தொடர் ஈடுபாட்டுச் செயல்பாடுகள் ​இடம்பெற்றன. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, கற்றல் மற்றும் டிஜிட்டல் அணுகலை ஆதரிக்கும் வகையில் வங்கி, புத்தகங்களுடன் மடிக்கணினியொன்றையும் திறன் பலகையொன்றையும் (smart board) நன்கொடையாக வழங்கியது. நூலகம் திறக்கப்படுவதற்கு முன்னதாக, 2026 மார்ச் 24 மற்றும் 26 ஆகிய திகதிகளில் பாடசாலையின் ‘பஹசர வாரம்’ நடத்தப்பட்டது. இவ் வாரம், புதிய ‘பஹசர’நூலகப் பிரிவின் திறப்பு விழாவுடன் நிறைவடைந்தது. இளம் மாணவர்களின் விளையாட்டு, படைப்பாற்றல் மற்றும் அறிவுசார் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ‘பஹசர’வாரம் புதிய நூலகத்தின் திறப்பைக் கொண்டாடும் சமூக நிகழ்வாக பல்வேறு வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களை ஒன்றிணைத்தது. முதல் அமர்வு, பாடசாலை கிரிக்கெட் போட்டியையும் செலான் வங்கியின் சிறுவர் சேமிப்புக் கணக்கான செலான் டிக்கிரியை அடிப்படையாகக் கொண்ட ஈடுபாட்டுடனான சிறுவர் சந்தையையும் உள்ளடக்கியிருந்தது. அதனைத் தொடர்ந்த அமர்வில், தரம் 10 மற்றும் 11 ஐச் சேர்ந்த மாணவர்களுக்கு பட்டறை ஊடாக நிதி முகாமைத்துவத்தின் அடிப்படைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும், மாணவர்கள் தங்கள் கலை வெளிப்பாட்டுத் திறனை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும் வகையில் பாடசாலைச் சித்திரப் போட்டியும் நடத்தப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவித்த செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைப் பிரிவு உதவிப் பொது முகாமையாளர் ஆசிரி அபயரத்ன, “நாடெங்கிலும் 300 ‘பஹசர’ நூலகங்களை நிறுவும் தனது உறுதிப்பாட்டை நோக்கி வங்கி ஸ்திரமாக முன்னேறி வரும் நிலையில், 291 ஆவது நூலகத்தின் திறப்பு விழா ஒரு முக்கிய படியாகும். நூலகப் புனரமைப்புகளுக்கு நிதியளிப்பதிலும் மாணவர்களின் அறிவையும் திறன்களையும் வளர்ப்பதற்காக அத்தியாவசியக் கல்வி வளங்களை வழங்குவதிலும் செலான் வங்கி தொடர்ந்து உறுதியாக உள்ளது.” என்று தெரிவித்தார். 

இத்திட்டத்தின் வெற்றியை உறுதி செய்வதற்காக கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தங்களின் முழு ஒத்துழைப்பையும் வழங்கினர். இது ‘பஹசர வார’ நடவடிக்கைகளில் மாணவர்களின் வலுவான பங்கேற்பு மூலம் மேலும் உறுதி செய்யப்பட்டது. 

2013 மார்ச் 1 அன்று தொடங்கப்பட்ட செலான் ‘பஹசர’ நூலகத் திட்டம், செலான் வங்கியின் நீண்டகால சமூக நிலைத்தன்மைக்கான முயற்சியாகத் திகழ்கிறது. இத்திட்டம் வருங்கால சந்ததியினரை முன்னேற்றுவதில் கல்வியை மையமாக வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத் திட்டத்தின் ஊடாக செலான் வங்கி, நூலக உட்கட்டமைப்பு வலுப்படுத்தல், அத்தியாவசிய கற்றல் கருவிகளுக்கான அணுகலை விரிவுபடுத்தல் என்பவற்றின் மூலம் நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. வங்கி, தனது மைல்கல்லான 300 ஆவது ‘பஹசர’ நூலகத்தை நோக்கி சீராக முன்னேறி வரும் வேளையில், இந்த மைல்கல்லானது ‘பஹசர’ பயணத்தின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக விளங்குகிறது. இது இலங்கை முழுவதும் அறிவைக் கட்டியெழுப்புவதற்கும் நிதிசார் எழுத்தறிவை வளர்ப்பதற்கும் நீடித்த சமூகத் தாக்கத்தை உருவாக்குவதற்குமான செலான் வங்கியின் அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.


MOST READ

காணொளி
மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

Mobitel Upahara