Header Logo
Mogo Academy

செய்திகள்
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் சடலம் பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம்

Jul 20, 2026 - 07:10 PM -

0

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் சடலம் பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம்
Mobitel inner

காலமான முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள் பொரளை மயானத்தில் முழுமையான பொலிஸ் மரியாதையுடன் இடம்பெற்றன. 

முன்னாள் பொலிஸ் மா அதிபர் கடந்த 17 ஆம் திகதி காலை அவரது வீட்டில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார். 

அவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், தனது பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியால் அவர் சுட்டுக்கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

சி.டி.விக்ரமரத்னவின் சடலம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் போது திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. 

நாட்டின் 35 ஆவது பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய சி.டி. விக்ரமரத்ன உயிரிழக்கும் போது 63 வயதாகும். 

1986 ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்த அவர், 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் சேவை இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார். 

அதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி அவர் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். 

2023 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த போதிலும், புதிய பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்படும் வரை அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பல தடவைகள் சேவை நீடிப்பு வழங்கப்பட்டதன் காரணமாக, சி.டி. விக்ரமரத்ன மேலும் சுமார் 8 மாதங்கள் பொலிஸ் மா அதிபர் பதவியில் பணியாற்றினார். 

எனினும் அவர் 2023 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

Mobitel Upahara