Header Logo
Mogo Academy

செய்திகள்
நீதி அமைச்சருக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடிதம்!

Jul 20, 2026 - 10:43 PM -

0

நீதி அமைச்சருக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடிதம்!
Mobitel inner

உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. 

இதன்மூலம், எவ்வித அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு முன்னர், இந்த முன்மொழிவை முழுமையாக ஆராய்ந்து விடயப்பரப்பு சார்ந்த அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கும் நோக்கில் பொருத்தமான குழுவொன்றை நியமிக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர். 

அரசாங்கம் கொண்டுவரத் தயாராகி வருவதாகக் கூறப்படும் உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசியலமைப்புத் திருத்த முன்மொழிவு குறித்து தற்போது சமூகத்தில் பலத்த விவாதங்கள் எழுந்துள்ளன. 

ஏற்கனவே இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் நீதவான்கள், மாவட்ட நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிச்சேவை சங்கத்தின் 65 நீதிபதிகள் இந்த முன்மொழிவுக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். 

இவ்வாறான பின்னணியில், முன்மொழியப்பட்டுள்ள இந்த அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. 

மேற்கோள்: 

"எவ்வித அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு முன்னர், இந்த முன்மொழிவை முழுமையாக ஆராய்ந்து விடயப்பரப்பு சார்ந்த அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கும் நோக்கில் பொருத்தமான குழுவொன்றை நியமிக்குமாறு நாங்கள் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம். 

அமைச்சு, நீதித்துறை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் பொருத்தமானதாகக் கருதப்படும் ஏனைய பங்குதாரர்களை உள்ளடக்கியதாக அக்குழு அமைய வேண்டும். 

இவ்விடயங்கள் குறித்து முழுமையாகக் கலந்துரையாடுவதற்கு உங்களுக்கு வசதியான மிக விரைவான நேரத்தில் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குமாறும் மேலும் கேட்டுக்கொள்கிறோம். 

நீதி நிர்வாகத் துறையின் முக்கிய பங்குதாரர்களுடன் அர்த்தமுள்ள ஆலோசனைகள் நடத்தப்படும் வரை, இந்த முன்மொழிவு தொடர்பாக எவ்வித அடுத்தகட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படாது என நாங்கள் மனப்பூர்வமாக நம்புகிறோம்." 

மேற்கோள் நிறைவு


MOST READ

காணொளி
மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

Mobitel Upahara