Header Logo
Mogo Academy

வணிகம்
சமூக வழிகாட்டுதலை மீறியமைக்காக இலங்கையில் 4 இலட்சத்திற்கும் அதிகமான வீடியோக்களை நீக்கியது TikTok

Jul 21, 2026 - 01:40 PM -

0

சமூக வழிகாட்டுதலை மீறியமைக்காக இலங்கையில் 4 இலட்சத்திற்கும் அதிகமான வீடியோக்களை நீக்கியது TikTok
Mobitel inner

தனது பயனர்களுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் தளத்தை உருவாக்குவதற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், TiKToK நிறுவனம் 2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டுக்கான (Q1 2026) சமூக வழிகாட்டுதல் அமலாக்க அறிக்கையை (Community Guidelines Enforcement Report) வெளியிட்டுள்ளது. 2026 ஜனவரி முதல் மார்ச் வரையிலான தரவுகளை உள்ளடக்கிய இந்த அறிக்கை, உலகளாவிய சமூகத்திற்கு சிறந்த பயனர் அனுபவத்தை உறுதி செய்வதற்காக, சமூக வழிகாட்டுதல்களை மீறும் உள்ளடக்கங்களைக் கண்டறிந்து அகற்றுவதற்கு TikTok மேற்கொண்டுள்ள தீவிரமான மற்றும் முன்கூட்டிய நடவடிக்கைகள் குறித்த விபரங்களை வழங்குகிறது. 

2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில், இலங்கையில் சமூக வழிகாட்டுதல்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 441,089 வீடியோக்களை TikTok அகற்றியுள்ளது. இது தளத்தில் பதிவேற்றப்பட்ட மொத்த உள்ளடக்கங்களில் சுமார் 0.5% ஆகும். அகற்றப்பட்ட இந்த வீடியோக்களில் 99.1% வீடியோக்கள், பயனர்கள் எவரும் புகாரளிப்பதற்கு (User reports) முன்னரே TikTok நிறுவனத்தால் முன்கூட்டியே கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. இவ்வாறு முன்கூட்டியே நீக்கப்பட்ட 95% வீடியோக்கள் அவை பதிவிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள் நீக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், இதே காலப்பகுதியில் முறையான மறுபரிசீலனைக்கு பின்னர் 20,051 வீடியோக்கள் மீண்டும் தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. 

உலகளாவிய ரீதியில் TikTok இந்த காலாண்டில் மொத்தம் 184 மில்லியனுக்கும் அதிகமான (184,012,576) வீடியோக்களை அகற்றியுள்ளது. இதுவும் தளத்தில் பதிவேற்றப்பட்ட ஒட்டுமொத்த உள்ளடக்கங்களில் சுமார் 0.5% ஆகும். அகற்றப்பட்ட வீடியோக்களில், 178,014,154 வீடியோக்கள் தானியங்கி கண்டறிதல் தொழில்நுட்பங்கள் மூலம் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டதுடன், 8,838,710 வீடியோக்கள் மேலதிக ஆய்வுக்குப் பின்னர் மீண்டும் தளத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளன. 

செயற்கை நுண்ணறிவு (AI) மூலமான உள்ளடக்கக் கண்காணிப்பு முறையின் தொடர்ச்சியான முன்னேற்றங்கள் காரணமாக, 2026 முதலாம் காலாண்டில், பயனர்கள் எவரும் பார்ப்பதற்கு முன்னரே (Zero views) நீக்கப்பட்ட வீடியோக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த AI அமைப்புகள் பழைய உள்ளடக்கங்களைக் கண்டறிந்து அகற்றுவதிலும் தற்போது அதிக செயல்திறனுடன் விளங்குகின்றன. மேலும், அத்துமீறிய அல்லது பொருத்தமற்ற கருத்துகளைக் (Comments) கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்திய அமலாக்க உத்தியின் காரணமாக, கருத்துகள் நீக்கப்படும் வீதம் கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த காலாண்டில் உலகளவில் மொத்தம் 237,517,128 கருத்துகள் நீக்கப்பட்டுள்ளன. இது 2025 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் (Q4 2025) நீக்கப்பட்ட 218,793,572 கருத்துகளுடன் ஒப்பிடுகையில் உயர்வாகும். 

உலகளாவிய ரீதியில் முன்கூட்டியே உள்ளடக்கங்களை அகற்றும் வீதம் 99.3% ஆகக் காணப்பட்டதுடன், அடையாளப்படுத்தப்பட்ட உள்ளடக்கங்களில் 94.4% வீடியோக்கள் பதிவிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள் நீக்கப்பட்டுள்ளன. TikTok தளத்தின் நம்பகத்தன்மையையும் பாதுகாப்பையும் பேணும் நோக்கில், இக்காலாண்டில் 86,288,705 போலி கணக்குகள் (Fake accounts) நீக்கப்பட்டுள்ளன. அத்துடன், 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட மேலும் 25,764,372 கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. 

அறிக்கையின்படி, நீக்கப்பட்ட ஒட்டுமொத்த வீடியோக்களில் 18.6% வீடியோக்கள் TikTok இன் உள்ளடக்கக் கொள்கைகளுக்கு முரணான முக்கியமான அல்லது முதிர்ந்த (Sensitive/Mature themes) உள்ளடக்கங்களைக் கொண்டிருந்தன. மேலும் 12.6% வீடியோக்கள் தளத்தின் பாதுகாப்பு மற்றும் நாகரீகத் தரங்களை மீறியுள்ளன. நீக்கப்பட்ட வீடியோக்களில் 16.5% அபாயகரமான நடவடிக்கைகள் மற்றும் சவால்களையும் (Dangerous activities/Challenges), 12.9% உடல் அங்கங்களை வெளிப்படுத்துதல் மற்றும் பாலியல் ரீதியான நடத்தைகளையும் கொண்டிருந்தன. அதேவேளை, திருத்தப்பட்ட ஊடகங்கள் (Edited media) மற்றும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள் (AIGC) காரணமாக 2.1% வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன. 

TikTok நிறுவனம் இத்தகைய சமூக வழிகாட்டுதல் அமலாக்க அறிக்கைகளை அவ்வப்போது வெளியிடுவது, உள்ளடக்கங்கள் மற்றும் கணக்குகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளின் தன்மை மற்றும் அளவை வெளிப்படுத்துவதுடன், நிறுவனத்தின் முழுமையான வெளிப்படைத்தன்மையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டு அறிக்கை மற்றும் TikTok இன் உள்ளடக்க வழிகாட்டுதல்கள், கருவிகள் மற்றும் கொள்கைகள் பற்றிய விரிவான விபரங்களை ஆங்கில மொழியில் கிடைக்கப்பெறும் TikTok இன் வெளிப்படைத்தன்மை மையத்தில் (Transparency Centre) பார்வையிடலாம்.


MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara