Header Logo
Mogo Academy

செய்திகள்
600 குளிரூட்டப்பட்ட பேருந்துகளை கொள்வனவு செய்ய அனுமதி

Jul 21, 2026 - 03:25 PM -

0

 600 குளிரூட்டப்பட்ட பேருந்துகளை கொள்வனவு செய்ய அனுமதி
Mobitel inner

இலங்கை போக்குவரத்து சபையின் (இ.போ.ச) நகரங்களுக்கு இடையிலான மற்றும் தூரசேவைகளுக்காக 600 புதிய 'Deluxe' ரக குளிரூட்டப்பட்ட (A/C) பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2026 ஆம் ஆண்டிற்கான அரசாங்க முதலீட்டு திட்டத்தின் கீழ், இலங்கை போக்குவரத்து சபைக்கு 49 முதல் 54 ஆசனங்கள் கொண்ட 600 'Standard' ரக பேருந்துகளை கொள்வனவு செய்வதற்காக 14,400 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இருப்பினும், 2025–2026 வீதி பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கு புதிய பாதுகாப்பு விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய, நகரங்களுக்கு இடையிலான மற்றும் தூரசேவைகளுக்கு 'Deluxe' ரக குளிரூட்டப்பட்ட பேருந்துகளை பயன்படுத்துவது உகந்தது என அடையாளம் காணப்பட்டுள்ளதால், ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள நிதியொதுக்கீட்டின் கீழ் 'Standard' ரக பேருந்துகளுக்கு பதிலாக, மிகவும் வசதியான 600 'Deluxe' ரக குளிரூட்டப்பட்ட பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

MOST READ

காணொளி
பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

Mobitel Upahara