Header Logo
Mogo Academy

செய்திகள்
துருக்கி தூதருக்கும் திலித் ஜயவீரவுக்கும் இடையே சந்திப்பு

Jul 21, 2026 - 05:31 PM -

0

துருக்கி தூதருக்கும் திலித் ஜயவீரவுக்கும் இடையே சந்திப்பு
Mobitel inner

இலங்கைக்கான துருக்கித் தூதுவர் கலாநிதி செமிஹ் லுட்ஃபு துர்குட் (Semih Lutfu Turgut) அவர்களின் விசேட அழைப்பின் பேரில், சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர, கொழும்பில் உள்ள துருக்கித் தூதரகத்தில் விசேட கலந்தரையாடல் ஒன்றில் பங்கேற்றுள்ளார்.

இச்சந்திப்பின் போது, தற்போதைய சர்வதேச அரசியல் நிலைமைகள், பிராந்திய மற்றும் உலகளாவிய வளர்ச்சிப் போக்குகள், அத்துடன் இலங்கைக்கும் துருக்கிக் குடியரசுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையை ஒரு தொழில்முனைவு நாடாக மாற்றும் தொலைநோக்குச் சிந்தனையை வெற்றியடையச் செய்வதற்கு துருக்கிக் குடியரசிடமிருந்து பெறக்கூடிய ஒத்துழைப்புகள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாகவும் இரு தரப்பிலும் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில் சர்வஜன அதிகாரத்தின் ஊடகச் செயலாளர் ஹஸன் அலால்டீனும் கலந்துகொண்டார்.

MOST READ

காணொளி
பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

Mobitel Upahara