Jul 21, 2026 - 06:32 PM -
0
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள் நடவடிக்கைகள் இன்று (21) முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய அகழ்வுப் பணியின் போது, அருகருகே காணப்பட்ட இரு சிறுவர்களின் மனித எச்சங்கள் உட்பட 13 என்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் சில என்புக்கூடுகள் குவியலாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், சில என்புக்கூடுகளில் மண்டையோடுகள் இல்லாத நிலையும் அவதானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 03 சிறுவர்களின் மனித எச்சங்கள் உட்பட 04 என்புக்கூடுகள் இன்றைய தினம் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், செம்மணி மனிதப் புதைகுழியின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரை 93 நாட்கள் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதன்போது மொத்தம் 467 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 444 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
--
