Header Logo
Mogo Academy

செய்திகள்
இலஞ்சம் பெற்ற முல்லேரியா பிரதேச சபையின் வருமான பரிசோதகர் கைது

Jul 21, 2026 - 09:08 PM -

0

இலஞ்சம் பெற்ற முல்லேரியா பிரதேச சபையின் வருமான பரிசோதகர் கைது
Mobitel inner

இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் கொட்டிகாவத்தை - முல்லேரியா பிரதேச சபையின் உப அலுவலகத்தில் பணிபுரியும் வருமான பரிசோதகர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டாளர் 2018 ஆம் ஆண்டு கொள்முதல் செய்து இதுவரை வசித்து வரும் வீட்டிற்கு முல்லேரியா பிரதேச சபை அதிகாரிகள் வருகை தந்து, வீட்டின் மேல் தளத்திற்கும் கீழ் தளத்திற்கும் தனித்தனியாக வரி செலுத்துமாறு அறிவித்துள்ளனர். 

அதற்கமைய, முறைப்பாட்டாளர் அந்த அதிகாரிகள் கோரிய ஆவணங்களைத் தயாரித்து ஒப்படைத்துள்ளார்.

பின்னர், முல்லேரியாவ பிரதேச சபையின் வருமான பரிசோதகர் வீட்டிற்கு வந்து பரிசோதித்து விட்டு, வீட்டின் வரைபடம் மற்றும் மதிப்பீட்டில் பிரச்சினை இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 

அதனைப் பிரச்சினையில்லாதவாறு சரிசெய்து, முறைப்பாட்டாளரின் பெயரிலேயே வரியைச் செலுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக லஞ்சமாக 25,000 ரூபாய் பணத்தைக் கோரியுள்ளார்.

அதன்படி, அந்த இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்ட போது இலஞ்சக் குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாளை (22) கொழும்பு தலைமை நீீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara