Jul 22, 2026 - 08:31 AM -
0
இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்துடன் இரு சந்தேகநபர்களைக் கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (21) மாலை கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பார்க் வீதிப் பகுதியில் கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சம்பாதித்த விதத்தை உறுதிப்படுத்த முடியாத 2 கோடியே 70 இலட்சம் ரூபாய் பணத்தைக் காரொன்றில் எடுத்துச் சென்றபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 54 மற்றும் 59 வயதுடைய கொழும்பு 13 மற்றும் கொழும்பு 14 பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் தற்போது கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் இந்தப் பணத்தைச் சட்டவிரோதமான முறையில் சம்பாதித்தனரா என்பது தொடர்பில் கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
