Header Logo
Mogo Academy

விளையாட்டு
ஆப்கானிஸ்தான் அணி தலைவர் பதவி விலகல்

Jul 22, 2026 - 02:16 PM -

0

ஆப்கானிஸ்தான் அணி தலைவர் பதவி விலகல்
Mobitel inner

ஆப்கானிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் ஹஷ்மத்துல்லா ஷஹிடி, தமது தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

2022-ம் ஆண்டு ஒருநாள் அணியின் தலைவராக பொறுப்பேற்ற ஷஹிடி, சுமார் நான்கரை ஆண்டுகளாக அணியை வெற்றிகரமாக வழிநடத்தினார். 

அவரது தலைமையில், இந்தியாவில் நடைபெற்ற 2023 ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நெதர்லாந்து போன்ற வலுவான அணிகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாற்று சாதனை படைத்தது. 

மேலும், 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சேம்பியன்ஸ் டிராபி தொடரிலும் ஆப்கானிஸ்தான் அணியை அவர் வழிநடத்தினார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தான் அணியின் தலைவராக செயல்பட்டது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாகும். 

நேர்மை, ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்புடன் அணியுடன் இணைந்து பணியாற்றியதில் நான் பெருமை கொள்கிறேன். 

எனக்கு உறுதுணையாக இருந்த வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

தலைவர் பதவியில் இருந்து விலகினாலும், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து அணிக்காக விளையாடவுள்ளதாக ஷஹிடி தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் அயர்லாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு முன்பாக, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை புதிய தலைவரை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MOST READ

காணொளி
பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

Mobitel Upahara