Jul 22, 2026 - 02:53 PM -
0
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி (பொறியியலாளர்) ஆசிரி கருணாவர்தன அவர்களை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.
அதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவரிடம் வழங்கி வைத்தார்.
ஆசிரி கருணாவர்தன இதற்கு முன்னர் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
