Header Logo
Mogo Academy

செய்திகள்
சவூதியுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது அமெரிக்கா!

Jul 23, 2026 - 05:28 AM -

0

சவூதியுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது அமெரிக்கா!
Mobitel inner

மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவுடன் தனது சிவில் அணுசக்தித் திட்டத்தை மேம்படுத்துவதற்கு வழிவகுக்கும் வகையில், அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த ஒப்பந்தத்தின் துல்லியமான விபரங்கள் இதுவரை பகிரப்படவில்லை என்பதுடன், இது இன்னமும் அமெரிக்க காங்கிரஸின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளது. 

இது பல தசாப்த காலம் நீடிக்கக்கூடிய, பில்லியன் கணக்கிலான டொலர்கள் மதிப்பிலான கூட்டுப் பங்கான்மையாகும். 

இதில் சவூதியின் அணுசக்தித் திட்டத்துடன் அமெரிக்க நிறுவனங்களும் நிபுணர்களும் இணைந்து பணியாற்றவுள்ளனர். 

அத்துடன் இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உத்தரவாத ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தாகியுள்ளது. 

அமெரிக்காவுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் கூட்டு ஆய்வுக்குப் பிறகு, இறக்குமதி செய்யப்படும் எரிபொருளை நம்பியிருப்பதற்குப் பதிலாக, அமெரிக்காவினால் கட்டப்படும் செறிவூட்டல் நிலையத்தில் சவூதி அரேபியா தனது சொந்த மண்ணிலேயே யுரேனியத்தைச் செறிவூட்டி எரிபொருளை உற்பத்தி செய்ய அனுமதிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஒப்பந்தம் சவூதி அரேபியா தனது சொந்த அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கு வழிவகுக்கக்கூடும் என சிலர் கவலை வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

Mobitel Upahara