Header Logo
Mogo Academy

செய்திகள்
இலங்கையில் முன்கூட்டியே தாக்கத்தை ஏற்படுத்தவுள்ள எல் நினோ

Jul 23, 2026 - 10:09 AM -

0

இலங்கையில் முன்கூட்டியே தாக்கத்தை ஏற்படுத்தவுள்ள எல் நினோ
Mobitel inner

முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விட 'எல் நினோ' (El Niño) காலநிலை மாற்றமானது முன்கூட்டியே இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சுற்றாடல் துறை அமைச்சர் கலாநிதி தம்மிக பட்டபெந்தி எச்சரித்துள்ளார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்று வரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சுற்றாடல் துறை அமைச்சர், 'எல் நினோ'வின் உச்சகட்ட தாக்கம் நவம்பர் மாதமளவில் எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார். 

அத்துடன், ஜூலை, ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் இலங்கையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும், அதனைத் தொடர்ந்து ஒக்டோபர் முதல் டிசெம்பர் வரையான காலப்பகுதியில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

இந்தக் காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய சாத்தியமான தாக்கங்களுக்குத் திறம்பட முகங்கொடுக்கும் வகையில், அரச நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பது தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கலாநிதி பட்டபெந்தி குறிப்பிட்டார். 

'எல் நினோ' என்பது ஒரு உலகளாவிய மோசமான காலநிலை தாக்கமாகும் எனவும், அதன் தாக்கங்கள் இலங்கைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

MOST READ

காணொளி
யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

Mobitel Upahara