Header Logo
Mogo Academy

செய்திகள்
கம்பளையில் ஆற்றில் மூழ்கி மாயமான சிறுவன் சடலமாக மீட்பு

Jul 23, 2026 - 03:09 PM -

0

கம்பளையில் ஆற்றில் மூழ்கி மாயமான சிறுவன் சடலமாக மீட்பு
Mobitel inner

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில், நேற்று (22) மாலை மகாவலி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி மாயமான 15 வயதுச் சிறுவன், இன்று (23) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

நேற்று மாலை நான்கு சிறுவர்கள் இணைந்து மகாவலி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போதே இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

ஆற்றில் மூழ்கி காணாமல்போன சிறுவனைக் கண்டறியும் பணியில் பிரதேசவாசிகளும் கம்பளை பொலிஸாரும் இணைந்து உடனடியாகத் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். 

இரண்டாவது நாளாக இன்று காலை கடற்படையின் சுழியோடிகள் வரவழைக்கப்பட்டு, தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 

இத்தீவிர தேடுதலின் பலனாக இன்று பிற்பகல் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

சடலம் தொடர்பான முதற்கட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கம்பளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது. 

பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் குறித்து கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

--

MOST READ

காணொளி
யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

Mobitel Upahara