Jul 23, 2026 - 03:21 PM -
0
சீன நாட்டவரிடம் இருந்து 2 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அநுத ஜனாதித் பண்டார உள்ளிட்ட 5 சந்தேகநபர்களையும் இந்த மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களைக் கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று (23) ஆஜர்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
