Header Logo
Mogo Academy

செய்திகள்
துறைமுக நகரில் கடத்தப்பட்ட சீன பிரஜை சடலமாக மீட்பு

Jul 23, 2026 - 07:07 PM -

0

துறைமுக நகரில் கடத்தப்பட்ட சீன பிரஜை சடலமாக மீட்பு
Mobitel inner

துறைமுக நகரில் வைத்து சீனப் பிரஜைகள் சிலரால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மற்றொரு சீனப் பிரஜையின் சடலம் எஹலியகொடை - கரந்தனை காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 

இன்று அதிகாலை கொழும்பு கோட்டை துறைமுக நகருக்கு மீன்பிடிப்பதற்காக கெப் வாகனம் ஒன்றில் மூன்று சீனப் பிரஜைகள் வந்துள்ளனர். 

பின்னர் இரண்டு வாகனங்களில் குறித்த இடத்திற்கு வந்த வேறு சில சீனப் பிரஜைகள் குழுவொன்று அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகப் பொலிசார் தெரிவித்தனர். 

இதன்போது தாக்குதல் நடத்திய குழுவினர் சீனப் பிரஜை ஒருவரைக் கடத்திச் சென்றதுடன், அவர்கள் வந்த வேன் ஒன்றையும் அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர். 

சம்பந்தப்பட்ட வேனில் இருந்து வாயு துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் கரந்தனை - கேட்டுக்கடைப் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி சுற்றிவளைப்பு ஒன்றிற்காகச் சென்ற எஹலியகொடை பொலிஸ் நிலையத்தின் அதிகாரி குழுவொன்று காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான கல் குவியல் ஒன்றைக் கண்டறிந்துள்ளது. 

அதனுள் மனிதக் கையின் ஒரு பகுதி இருந்ததை கண்ட பொலிசார் உடனடியாக குறித்த பகுதியைச் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். 

இதன்போது குறித்த கல் குவியலுக்குள் நபரின் சடலம் ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. 

அது ஒரு சீனப் பிரஜைக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டதோடு, பின்னர் குறித்த சடலம் கொழும்பு துறைமுக நகரில் கடத்தப்பட்ட சீனப் பிரஜையினுடையது என்பது உறுதிப்படுத்தப்பட்டது. 

இதற்கமைய, சடலம் மேலதிக விசாரணைகளுக்காக இன்று பிற்பகல் அவிசாவளை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 

சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகில் மோட்டார் வாகனம் ஒன்றும் காணப்பட்டுள்ளதுடன், சந்தேகத்திற்கிடமான சீனப் பிரஜைகள் குழுவினர் சடலத்தை எடுத்துச் செல்வதற்காக அதைப் பயன்படுத்தியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. 

இதற்கிடையில் இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் சந்தேகிக்கப்படும் இரு சீனப் பிரஜைகள் நாட்டிலிருந்து தப்பியோடுவதற்காக முயன்றபோது கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளருமான எப்.யூ. வுட்லர் குறிப்பிட்டார். 

அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காகக் கரையோரப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளதுடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களும் கைது செய்யப்படவுள்ளதாகப் பொலிசார் தெரிவிக்கின்றனர். 

சீனப் பிரஜைகளுக்கிடையிலான மோதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. 

சீனத் தூதரகம் இச்சம்பவம் தொடர்பில் நெருக்கமாக அவதானம் செலுத்தி வருவதுடன், உண்மைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக உடனடியாக விரிவான விசாரணை ஒன்றை நடத்துமாறும், சீனக் குடிமக்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் அவர்களின் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் தேவைகளைப் பாதுகாக்குமாறும் இலங்கைப் பொலிசாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இலங்கையில் வசிக்கும் சீனக் குடிமக்கள் தங்கள் பாதுகாப்புத் தொடர்பில் மிகவும் கவனமாகவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் எனவும், அவசர காலங்களில் உடனடியாகப் பொலிசாருக்கு அறிவிக்குமாறும், உதவிக்காகத் தூதரகத்தைத் தொடர்புகொள்ளுமாறும் தூதரகம் அவர்களுக்கு நினைவூட்டுகிறது. 

சீனக் குடிமக்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் அவர்களின் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் தேவைகளைப் பாதுகாக்குமாறும் பொலிசாருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

Mobitel Upahara