Jul 23, 2026 - 10:11 PM -
0
வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் இன்று (23) இரவு துப்பாக்கிச் சூடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குழந்தையொன்றின் பிறந்தநாள் விழா நடைபெற்ற மண்டபம் ஒன்றை நோக்கி இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
