Header Logo
Mogo Academy

வணிகம்
எல்லைகளைக் கடந்த பயணங்களுக்கு வெகுமதி அளிக்க DFCC வங்கியும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையும் கைகோர்க்கின்றன

Jul 24, 2026 - 01:22 PM -

0

எல்லைகளைக் கடந்த பயணங்களுக்கு வெகுமதி அளிக்க DFCC வங்கியும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையும் கைகோர்க்கின்றன
Mobitel inner

DFCC வங்கி பிஎல்சி மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆகியவை இணைந்து, எல்லைகளைத் தாண்டி தங்கள் வாழ்க்கையை விரிவுபடுத்தும் வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு உயர்தர, கூட்டு-வர்த்தகநாமம் கொண்ட கடன் அட்டையான SriLankan Airlines DFCC Visa Platinum Credit Card கடன் அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த அறிமுக நிகழ்வு, 2026 ஜூலை 21 அன்று, கொழும்பு 3, காலி வீதி, DFCC வங்கி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் DFCC வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆகியவற்றின் சிரேஷ்ட நிர்வாகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இது இலங்கையின் இரண்டு முன்னணி வர்த்தகநாமங்களுக்கு இடையேயான ஒரு மூலோபாயக் கூட்டாண்மையின் தொடக்கத்தைக் குறிக்கிறது.  

இந்தப் புதிய திட்டம், அட்டைதாரர்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் மேற்கொள்ளும் செலவினங்கள் மூலம் FlySmiLes Miles புள்ளிகளைப் பெற இடமளிப்பதுடன், முன்னுரிமை அடிப்படையில் check-in, விமான நிலைய சொகுசு ஓய்வறை வசதி, கூடுதல் பயணப் பொதி எடைக்கான அனுமதி, வாழ்க்கைத்துணையுடன் பயணிக்கும் சலுகைகள் மற்றும் ஆண்டு முழுவதும் வழங்கப்படும் பல்வேறு வாழ்க்கை முறைச் சலுகைகள் உள்ளிட்ட உயர்தர பயண வரப்பிரசாதங்களையும் அனுபவிக்க வழிவகுக்கிறது. இன்றைய உலகளாவிய மட்டத்தில் இணைக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் தேவைகளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அட்டை, பயணத்திற்கு வெகுமதி அளிப்பதையும் தாண்டி, அன்றாட வாழ்க்கை முழுவதும் பெரும் மதிப்பை உருவாக்குகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் பதிவு செய்யும்போது 3,000 போனஸ் FlySmiLes Mile புள்ளிகளைப் பெறுகிறார்கள், இது அவர்களின் எதிர்காலப் பயணங்களுக்கு உடனடியான ஒரு தொடக்கத்தை அளிக்கிறது. 

இன்று, வணிகங்கள் புதிய சந்தைகளுக்கு விரிவடைவதற்கும், மாணவர்கள் வெளிநாடுகளில் வாய்ப்புகளைத் தேடுவதற்கும், குடும்பங்கள் கண்டங்களைக் கடந்து இணைந்திருப்பதற்கும், மக்கள் புதிய அனுபவங்களைக் கண்டறிவதற்கும் பயணம் ஒரு வழியாக உள்ளது. வாழ்க்கை பெருகிய முறையில் உலகமயமாகி வருவதால், வாடிக்கையாளர்கள் தாங்கள் வைத்திருக்கும் நிதித் தீர்வுகள், பணம் செலுத்துவதை எளிதாக்குவதைத் தாண்டி, இன்னும் பலவற்றைச் செய்ய இடமளிப்பதாக அமையவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். மிகவும் முக்கியமான பயணங்களுக்கு அவை ஆரவாரமின்றி துணையாக அமையவேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.  

DFCC வங்கி பிஎல்சியின் பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரியான திமால் பெரேராவைப் பொறுத்தவரை, மாறிவரும் அந்த வாழ்க்கை முறைதான் வங்கித் துறையின் எதிர்காலத்தை வடிவமைப்பதாகக் குறிப்பிட்டார். 

“இன்றைய வாடிக்கையாளர்கள், வங்கிச் சேவைகள் தங்கள் வாழ்க்கை முறையுடன் இயல்பாகப் பொருந்திப் போக வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் வணிகம், கல்வி, குடும்பம் அல்லது ஓய்வுக்காகப் பயணம் செய்தாலும், தாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் சேவைகள், பரிவர்த்தனைக்கு அப்பாற்பட்ட மதிப்பை உருவாக்க வேண்டும் என விரும்புகிறார்கள். இந்தக் கூட்டாண்மை, அந்த யதார்த்தத்தை அங்கீகரிப்பதையும், வாடிக்கையாளர்கள் ஏற்கனவே வாழும் வாழ்க்கைக்காக அவர்களுக்கு வெகுமதி அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, எங்கள் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு வங்கிச் சேவைகளை வடிவமைப்பதில் உள்ள எங்கள் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. நாங்கள் உருவாக்கும் தீர்வுகள், அவர்களின் மாறிவரும் வாழ்க்கை முறைகள் மற்றும் அபிலாஷைகளுக்கு ஏற்ப மேம்படுவதை இது உறுதி செய்கிறது.” 

 நம்பகமான வங்கிச் சேவையை அர்த்தமுள்ள பயணச் சலுகைகளுடன் ஒன்றிணைக்கும் இந்தக் கூட்டாண்மை, அன்றாடச் செலவுகளை எதிர்காலப் பயண வாய்ப்புகளாக மாற்றுவதோடு, வாடிக்கையாளர்களை வாழ்க்கை எங்கு அழைத்துச் சென்றாலும் அவர்களுக்கு அதிக மதிப்பையும் வழங்குகிறது. 

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவுத் தலைவர் திமுது தென்னக்கோன், வாடிக்கையாளர்கள் பயணத்தை அனுபவிக்கும் விதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை இந்தக் கூட்டாண்மை பிரதிபலிக்கிறது என்று கூறினார். 

வாடிக்கையாளர் விசுவாசத்தை அங்கீகரித்து வெகுமதி அளிப்பதே FlySmiLes-இன் நோக்கமாக எப்போதும் இருந்து வருகிறது. DFCC வங்கியுடனான எங்கள் கூட்டாண்மை மூலம், அந்த வெகுமதிகளைப் பயணத்திற்கு அப்பாற்பட்டும் நாங்கள் விரிவுபடுத்துகிறோம். இதன் மூலம், எங்கள் உறுப்பினர்கள் தங்களின் அன்றாடச் செலவுகள் வழியாக FlySmiLes Miles புள்ளிகளைப் பெறுவதோடு, அவர்களின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் பலன்களையும் அனுபவிக்க முடிகிறது. வாடிக்கையாளர்கள் தங்களின் அன்றாடப் பரிவர்த்தனைகளை வெகுமதியளிக்கும் பயணங்களாக மாற்றுவதற்கான கூடுதல் வாய்ப்புகளை நாங்கள் இணைந்து உருவாக்குகிறோம். 

இந்தக் கூட்டாண்மை, வங்கித்துறையில் ஒரு பரந்த பரிணாம வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. இதில், நிதிச் சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் முக்கியமான அனுபவங்களின் ஒரு பகுதியாக மாறி வருகின்றன. மக்கள் எல்லைகளைக் கடந்த வாய்ப்புகளுடன் மென்மேலும் இணைக்கப்படுவதால், வங்கிச் சேவைகளும் அவர்களுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். SriLankan Airlines DFCC Visa Platinum Credit Card, வாடிக்கையாளர்களின் அன்றாடச் செலவுகளை எல்லைகளைக் கடந்த மேலும் பயனுள்ள பயணங்களாக மாற்ற உதவும் வகையில், இதை மனதில் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

Mobitel Upahara