Header Logo
Mogo Academy

வணிகம்
SLT‑MOBITEL மஹாரகம மற்றும் பத்தரமுல்ல நிலையங்கள் புதிதாக மேம்படுத்தப்பட்டு வாடிக்கையாளர் அனுபவங்களில் டிஜிட்டல் புத்தாக்கத்தை சேர்த்துள்ளது

Jul 24, 2026 - 03:23 PM -

0

SLT‑MOBITEL மஹாரகம மற்றும் பத்தரமுல்ல நிலையங்கள் புதிதாக மேம்படுத்தப்பட்டு வாடிக்கையாளர் அனுபவங்களில் டிஜிட்டல் புத்தாக்கத்தை சேர்த்துள்ளது
Mobitel inner

வேகமான, சௌகரியமான மற்றும் மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர்களை மையப்படுத்திய சேவை அனுபவங்களை பெற்றுக் கொடுக்கும் வகையில் SLT‑MOBITEL தனது மஹாரகம மற்றும் பத்தரமுல்ல சேவை நிலையங்களை மேம்படுத்தி மீளத்திறந்துள்ளது. 

புதுப்பிக்கப்பட்ட நிலையங்கள் தற்போது வார நாட்களில் மு.ப. 9.00 முதல் பி.ப. 9.00 மணி வரையும், சனிக் கிழமைகளில் மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 5.00 மணி வரையும் இயங்கும். இதனூடாக, வாடிக்கையாளர்களுக்கு SLT‑MOBITEL இன் பரந்த நிலையான, மொபைல், புரோட்பான்ட், என்டர்பிரைஸ் மற்றும் டிஜிட்டல் சேவைகளை அணுகும் நெகிழ்ச்சித் தன்மை வழங்கப்படுகின்றது. 

டிஜிட்டல் புத்தாக்கத்தை பின்பற்றும் SLT‑MOBITEL இன் நோக்கத்தின் பிரகாரம், இந்த சேவை நிலையங்கள் டிஜிட்டல் கியு முகாமைத்துவ கட்டமைப்பை கொண்டுள்ளதால், காத்திருக்கும் நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் சேவைகள் வழங்கப்படுவது உறுதி செய்யப்படுகின்றது. வாடிக்கையாளர் சேவை முற்பதிவு வசதியினூடாக விஜயம் செய்வோருக்கு தமக்குரிய சேவை நேரத்தை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள முடியும் என்பதால், பெருமளவு சௌகரியம் சேர்க்கப்படுகிறது. முழுமையான வயர்லஸ் சூழலில், ஊழியர்களால், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை இந்த வளாகத்திலிருந்து பெற்றுக் கொடுக்க முடிவதுடன், டிஜிட்டல் கொடுப்பனவு தெரிவுகளை கொண்டுள்ளதால், பாதுகாப்பாக, துரிதமாக மற்றும் பணப் புழக்கமில்லாத பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் முடியும். இந்த மேம்படுத்தல்களினூடாக, உலகத் தரம் வாய்ந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் ஒன்றிணைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் தொழில்னுட்பங்கள் ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் SLT‑MOBITEL இன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மேம்படுத்தல்களினூடாக, நவீன, சௌகரியமான சூழல் வழங்கப்பட்டு, வாடிக்கையாளர் ஈடுபாடு மற்றும் செயற்பாட்டு வினைத்திறன் ஆகியன உறுதி செய்யப்பட்டுள்ளன. 

பொது மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த புதிய மேம்படுத்தப்பட்ட நிலையங்கள், இலங்கையின் நம்பிக்கையை வென்ற டிஜிட்டல் பங்காளர் எனும் SLT‑MOBITEL இன் நிலையை மேம்படுத்திய அனுபவத்தை வழங்குகிறது. இந்த மெருகேற்றங்களுடன், தொடர்ந்தும் வாடிக்கையாளர் சேவைச் சிறப்பில் SLT‑MOBITEL புதிய நியமங்களை பதிவு செய்வதுடன், ஒவ்வொரு தொடர்பாடல்களும் வேகமானதாகவும், ஸ்மார்ட்டானதாகவும், ஒப்பற்றதாகவும் அமைந்திருக்கச் செய்கிறது.

MOST READ

காணொளி
பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

Mobitel Upahara