Jul 30, 2026 - 11:35 AM -
0
நடைமுறை வணிக சவால்களை எதிர்கொள்வதற்கான தொழில்நுட்பத் தீர்வுகளை மேம்படுத்துவதில் தனது முன்னணி பாரம்பரியத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, AI-Assisted Coding Challenge 2026 போட்டியின் வெற்றியாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வை முன்னெடுத்திருந்தது. SLT வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, நிறுவனத்தின் படைப்பாற்றல் திறன், பொறியியல் சிறப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மேம்பாடுகள் மூலமாக இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கான அதன் உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெற்றிகரமாக வெளிப்படுத்தியது.
SLT-MOBITEL இன் AI & Data Business Unit மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டி, நிறுவனத்தின் உள்வாரி ஊழியர்களுக்கு மாத்திரம் பிரத்தியேகமாக நடத்தப்பட்டதுடன், AI மூலமாக நடைமுறை வணிக சவால்களுக்குத் தீர்வுகாண்பதற்கு உள்நாட்டுத் திறமைகளை அணிதிரட்டுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியாக அமைந்திருந்தது. மென்பொருட்கள் வடிவமைக்கப்படும், உருவாக்கப்படும் மற்றும் விநியோகிக்கப்படும் முறையை மாற்றுவதன் மூலம், AI-assisted development எவ்வாறு குழுக்களை இன்னும் புத்திசாலித்தனமாகச் சிந்திக்கவும், வேகமாக code செய்யவும் மற்றும் நம்பிக்கையுடன் பொறியியல் பணிகளை மேற்கொள்ளவும் தூண்டுகின்றது என்பதை இப்போட்டி நிரூபித்தது.
வெற்றிபெற்ற குழுக்களின் சாதனைகளையும், அனைத்துப் பங்கேற்பாளர்கள், வழிகாட்டிகள் மற்றும் ஏற்பாட்டாளர்களின் கூட்டு முயற்சியையும் விருது வழங்கும் விழாவில் பாராட்டியதைத் தொடர்ந்து, AI-Assisted Coding Challenge 2026 போட்டி மிகச் சிறப்பான முறையில் நிறைவுற்றது. LEXI, NEXGEN CREATORS, NextGen Analytics மற்றும் ThunderDC ஆகிய அணிகளை உள்ளடக்கிய இறுதிப் போட்டியாளர்கள், நேரடிச் செயல்விளக்கங்கள் மற்றும் காணொளிகள் மூலமாக groundbreaking legal platform solutions முன்வைத்திருந்தனர்.
Team NEXGEN CREATORS தங்களது தனித்துவமான கற்பனைத்திறன் மற்றும் தொழில்நுட்ப சிறப்புக்காக ஒட்டுமொத்த வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டதுடன், கேடயம், பணப்பரிசு மற்றும் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர். அத்துடன், முதலாம் இடத்தைப் பெற்ற Team LEXI, இரண்டாம் இடத்தைப் பெற்ற Team ThunderDC ஆகிய அணிகளின் சிறந்த சாதனைகளைப் பாராட்டும் முகமாகப் பணப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
பரிசோதனை முயற்சிகள், கூட்டுப்பணி மற்றும் தொடர்ச்சியான கற்றல் போன்ற கலாசாரத்தை வளர்ப்பதன் மூலம், இலங்கை முழுவதும் AI பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான SLT-MOBITEL இன் பரந்த தொலைநோக்குப்பார்வை குறித்த தெளிவை இப்போட்டி வழங்கியிருந்தது. இந்த உள்வாரி முயற்சியின் ஊடாகத் தொழில்நுட்பத் திறன் மற்றும் அறிவை வளர்ப்பதன் மூலம், AI இன் முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதற்கான உந்துதலும் நிபுணத்துவமும் ஏற்கனவே தங்களது சொந்த ஊழியர்களிடமே காணப்படுகின்றது என்பதை SLT-MOBITEL நிரூபித்துக் காட்டியுள்ளது. இம்முயற்சி, இலங்கையைப் பிராந்தியத்தில் டிஜிட்டல் உருமாற்றத்தின் முன்னணியில் நிலைநிறுத்துவதற்காக SLT-MOBITEL மேற்கொண்டு வரும் விரிவான கூட்டு முயற்சிகளின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கின்றது.
இந்நிகழ்வு, உள்நாட்டு வணிகங்கள், பிரஜைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக, புதுமையும் படைப்பாற்றலும் ஒன்றிணையும் ஒரு எதிர்காலத்தை உருவாக்குவதில் உறுதியுடன் செயல்படும் ஒரு நம்பகமான தேசிய தொழில்நுட்பத் தலைவராக SLT-MOBITEL கொண்டுள்ள பங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
