Header Logo
Mogo Academy

வணிகம்
சிறந்த ABF விருதுகள் 2026 இல் இலங்கையின் அதிக விருதுகளை வென்ற வங்கியாக கொமர்ஷல் வங்கி மீண்டும் சாதனை படைத்துள்ளது

Jul 30, 2026 - 12:00 PM -

0

சிறந்த ABF விருதுகள் 2026 இல் இலங்கையின் அதிக விருதுகளை வென்ற வங்கியாக கொமர்ஷல் வங்கி மீண்டும் சாதனை படைத்துள்ளது
Mobitel inner

2026ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற Asian Banking & Finance – ABF விருது வழங்கல் விழாவில், மூன்று முக்கிய பிரிவுகளின் கீழ் ஆறு விருதுகளை சுவீகரித்து, இலங்கையில் அதிக விருதுகளை வென்ற வங்கியாக கொமர்ஷல் வங்கி மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. 

சிங்கப்பூரின் Marina Bay Sands Expo & Convention Centre இல், நடைபெற்ற இந்த விழாவில், சில்லறை வங்கிச் சேவை, மொத்த வங்கிச் சேவை, மற்றும் பெருநிறுவன மற்றும் முதலீட்டு வங்கிச் சேவை ஆகிய துறைகளில் இவ்விருதுகள் வெல்லப்பட்டன. இது வங்கியின் தொழில்நுட்ப புத்தாக்கம், நிலைபெறுதகு தன்மை மற்றும் சிக்கலான நிதி தீர்வுகளில் கொண்டுள்ள நிபுணத்துவத்தை பறைசாற்றுகின்றது. 

சில்லறை வங்கித் துறைப் பிரிவில் சிறந்த தனியார் வங்கி மற்றும் சிறந்த SME வங்கி ஆகிய விருதுகளை வங்கி வென்றெடுத்தது. இது இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு வங்கி வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவை அங்கீகரித்துள்ளது. மொத்த வங்கித் துறையில், வங்கியின் முன்னோடி முயற்சியான செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் ‘SME கடன் மதிப்பீட்டு தீர்வுக்காக’, இலங்கையின் சிறந்த உள்நாட்டு AI முயற்சி விருதும், நிலைபெறுதகு கடன் வழங்கல் முறைகளுக்காக சிறந்த பசுமை நிதியளிப்பு வங்கி விருதும் வழங்கப்பட்டன. 

பெருநிறுவன மற்றும் முதலீட்டு வங்கித் துறையில் வர்த்தக நிதிச் சேவையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய ‘TradeLink’ தளத்திற்காக சிறந்த பெருநிறுவன வாடிக்கையாளர் முயற்சி விருதும், 2025 ஆம் ஆண்டு நிலைபெறுதகு திட்டங்களுக்காக வழங்கப்பட்ட 15 பில்லியன் ரூபா பெறுமதியான பசுமைப் பிணைமுறிக்காக சிறந்த கடன் ஒப்பந்தம் விருதும் வழங்கப்பட்டன. 

இந்தச் சாதனை குறித்து கருத்துத் தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சனத் மனதுங்க, இந்த விருதுகள் எமது நிதியியல் பலம், வாடிக்கையாளர் உறவுகள், தொழில்நுட்ப புத்தாக்கம் மற்றும் நிலைபேறான வளர்ச்சி மீது எமது உறுதிப்பாட்டிற்கு கிடைத்த மிகச்சிறந்த சான்றாகும் எனத் தெரிவித்தார். மேலும், இந்த அங்கீகாரம் வங்கியின் ஒட்டுமொத்த அணியின் கூட்டு முயற்சிக்கும், வாடிக்கையாளர்கள் வங்கி மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும் கிடைத்த வெற்றியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும். 

கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் 270ற்கும் மேற்பட்ட தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 21 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance PLC மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.


MOST READ

காணொளி
செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

Mobitel Upahara