Jul 30, 2026 - 04:46 PM -
0
50 ஓவர் ஆடவர் உலக கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் தென்ஆப்பிரிக்கா, சிம்பாப்வே, நமீபியாவில் நடைபெற இருக்கிறது. இதில் 14 அணிகள் பங்கேற்கின்றன. உலக கிண்ணத்தில் ஐசிசி சில மாற்றங்களை செய்துள்ளது. இந்த மாற்றம் ஐசிசி-யின் வருடாந்திர ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
2027 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் சூப்பர் சீரிஸ் சுற்று, சூப்பர் 7 சுற்று என புதிய வடிவத்தில் நடைபெறுவதால் முன்பை விட அதிகமான ஆட்டங்களில் விளையாட வேண்டி இருக்கும்.
எனவே அணிக்கு தேர்வு செய்யப்படும் வீரர்களின் எண்ணிக்கையை 15 இல் இருந்து 17 ஆக உயர்த்த ஐ.சி.சி. அனுமதிக்க வேண்டும் என அவுஸ்திரேலிய பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு வலியுறுத்தியுள்ளார்.
