Header Logo
Mogo Academy

செய்திகள்
இலங்கையிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு புதிய வரியை விதித்தது அமெரிக்கா

Jul 24, 2026 - 06:07 AM -

0

இலங்கையிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு புதிய வரியை விதித்தது அமெரிக்கா
Mobitel inner

தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த 10% உலகளாவிய வரி காலாவதியாகும் நிலையில், இலங்கை உட்பட 60 வர்த்தக கூட்டாளி நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா 10% மற்றும் 12.5% புதிய வரிகளை விதிக்கவுள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

கட்டாய உழைப்புத் தடைச் சட்டங்கள் தளர்வாக அமுல்படுத்தப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைக் சுட்டிக்காட்டி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆர்ஜென்டினா, பங்களாதேஷ், பிரித்தானியா, கம்போடியா, கனடா, ஈக்வடோர்,குவாத்தமாலா, ஒண்டுராஸ், இந்தியா, இந்தோனேசியா, ஜோர்தான், மலேசியா, மெக்சிகோ, பாகிஸ்தான், இலங்கை, டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகளின் பொருட்களின் மீது அமெரிக்கா 10% வரியை விதிக்கவுள்ளது. 

இதுதவிர சீனா உள்ளிட்ட 38 நாடுகளுக்கு 12.5% வரியை விதிப்பதற்கு ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. 

அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 60 வர்த்தக பங்காளி நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா இந்த புதியை வரியை அறிமுகப்படுத்துகின்றது. 

அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும் நோக்கில் கடந்த ஆண்டு தேசிய அவசரகாலச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 10% முதல் 50% வரையிலான "பரஸ்பர" வரிகளை கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்க உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. 

அதனை தொடர்ந்து ட்ரம்ப் 150 நாட்களுக்கு 10% தற்காலிக வரியை விதித்திருந்தார். இது இன்றுடன் நிறைவடையும் நிலையில் குறித்த புதிய அமுல்படுத்தியுள்ளது. 

இதனை தொடர்ந்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உலகளாவிய வரி என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வெள்ளை மாளிகையின் புதிய முயற்சியாக இது அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

Mobitel Upahara